Election bannerElection banner
Published:Updated:

டெங்கு கொசு வளர்த்தவர்களுக்கு ஒரு லட்சம் அபராதம்! - கரூர் கலெக்டர் அதிரடி

டெங்கு கொசு வளர்த்தவர்களுக்கு ஒரு லட்சம் அபராதம்! - கரூர் கலெக்டர் அதிரடி
டெங்கு கொசு வளர்த்தவர்களுக்கு ஒரு லட்சம் அபராதம்! - கரூர் கலெக்டர் அதிரடி

டெங்கு கொசு வளர்த்தவர்களுக்கு ஒரு லட்சம் அபராதம்! - கரூர் கலெக்டர் அதிரடி


                

'கரூர் மாவட்டத்தில் சுற்றுப்புற சுகாதாரத்தைப் பேணிக் காக்காத டெங்கு கொசு வளர்வதற்கு வழிவகை செய்த வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு இதுவரை ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும்1,565 நபர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது' என்று கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.

கரூர் மாவட்டம் முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் டெங்கு தடுப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வஞ்சியம்மன் கோவில் தெரு,உழவர் சந்தை,முத்துராஜபுரம்,புகளூர் காகித ஆலை பணியாளர்கள் குடியிருப்பு, புஞ்சை புகளூர் பேரூராட்சி, வேலாயுதம்பாளையம், அண்ணாநகர், முல்லை நகர், காந்தி நகர் மற்றும் கரூர் ஊராட்சி ஒன்றியம் காதப்பாறை, க.குப்புச்சிப்பாளையம், பெரிச்சிப்பாளையம், சோமூர் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் நடைபெற்று வரும்டெங்குத் தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் அவர்கள் வீடு வீடாகச் சென்று சுற்றுப்புறங்களை மக்களோடு நின்று இன்று பணிகளை ஆய்வு செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது, "டெங்கு தடுப்பு பணிகளான சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ளல், கழிவுநீர் வடிகால்களைத் தூர்வாரி உடனுக்குடன் கழிவுகளை அப்புறப்படுத்துதல் போன்ற பணிகள் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. தண்ணீரில் குலோரினேட் செய்தல் உள்ளிட்ட பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாகப் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

கூடுதலாகப் பொதுமக்களும் தங்கள் பகுதிகளைச் சுகாதாரமாக வைத்துக்கொள்வதுடன் தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரங்களை கொசுக்கள் புகா வண்ணம் நன்கு மூடி வைக்க வேண்டும். வீட்டில் தேவையற்ற பிளாஸ்டிக் டப்பாக்கள், மண்பாண்டங்கள், ஆட்டுக்கல், உபயோகமற்ற டயர்கள், பிளாஸ்டிக் பைகள் போன்ற பயன்பாடற்ற பொருள்களை அப்புறப்படுத்தி தங்கள் குடியிருப்புப் பகுதிகளை சுத்தமாக வைத்துத் தங்களைக் காத்துக்கொள்வதுடன் மாவட்ட நிர்வாகத்துக்கு சமூக அக்கறையோடு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

மேலும், மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சிறப்பு மர்த்துவ முகாம்களைப் பயன்படுத்தி பொதுமக்கள் உரிய மருத்துவ பரிசோதனை பெற்றும், நிலவேம்புக் குடிநீரைப் பருகியும் பொதுமக்கள் டெங்கு பாதிப்பில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ள வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு