Election bannerElection banner
Published:Updated:

`எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்தும் அரசு அவர் ஆரம்பித்த ஆலையை மூடலாமா?' - ஊழியர்கள் குமுறல்

விகடன் விமர்சனக்குழு

அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் உள்ள 210 ஊழியர்களை நிர்வாகம் திடீரென பணியிடமாற்றம் செய்திருக்கிறது. இச்செயல் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான ஏற்பாடு என்று கூறி ஊழியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.  

`எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்தும் அரசு அவர் ஆரம்பித்த ஆலையை மூடலாமா?' - ஊழியர்கள் குமுறல்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே நடிப்பிசை புலவர் கே.ஆர். இராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் நலன் கருதி எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட ஆலையாகும். மிகவும் லாபகரமாக இயங்கிவந்த இந்த ஆலை கடந்த சில ஆண்டுகளாக நிர்வாகச் சீர்கேடுகளால் தத்தளிக்க ஆரம்பித்தது. கடந்த ஆண்டு வரை இந்த ஆலைக்குக் கரும்பு சப்ளை செய்த விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை மட்டும் ரூ.9 கோடி உள்ளது. அந்தப் பணத்தை விவசாயிகள் கேட்டு பலமுறை போராட்டங்கள் நடத்தியும் பலனில்லை.  

இந்நிலையில், இன்று நிர்வாகம் சார்பில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். அதில், 2016-17 அரவைப் பருவத்துக்குப் போதுமான கரும்பு இல்லாத காரணத்தினால், அரவை நடைபெறவியலாதநிலை நீடித்து வருகிறது. ஆலையின் நிதி நிலைமை மற்றும் தொழிலாளர்களின் நலன் கருதி தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 1983 பிரிவு 181-ன்படி, இந்த ஆலையில் பணிபுரியும் 210 ஊழியர்களைத் தற்காலிகமாகப் பிற சகோதர ஆலைகளுக்குப் பணியிடமாற்றம் செய்ய ஆணையிடப்படுகிறது. அதில் 210 ஊழியர்களின் பெயர் பட்டியலும் இணைக்கப்பட்டு அவர்களைப் பெரம்பலூர், திருத்தணி, கள்ளக்குறிச்சி, செய்யாறு ஆகிய ஊர்களில் உள்ள ஆலைகளுக்கு இடமாற்றம் செய்ய அறிவித்துள்ளார்கள்.  

`எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்தும் அரசு அவர் ஆரம்பித்த ஆலையை மூடலாமா?' - ஊழியர்கள் குமுறல்

இந்த அறிவிப்பை ஏற்க மறுத்த ஊழியர்கள், இன்று ஆலையின் வாசலில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினார்கள்.  அவர்கள் பேசியபோது, 'காவிரியில் தண்ணீர் வருகின்ற நிலையில், நல்ல மழைக்கான அறிகுறி நிலவும் சூழ்நிலையில், கரும்புப் பயிரிடவும், அதை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கவும் விவசாயிகள் தயாராக உள்ளார்கள். விவசாயிகளுக்குத் தரவேண்டிய நிலுவைத் தொகையை அரசிடம் பெற்று கொடுக்க முன்வராத ஆலை நிர்வாகம், இங்குப் பணிபுரியும் எங்களை இடமாற்றம் செய்துவிட்டு ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு வழிவகை செய்கிறார்கள். நாளும் எம்.ஜி.ஆர். பெயரை உச்சரித்து, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடுகிற தமிழக அரசு, எம்.ஜி.ஆர். திருக்கரங்களால் தோற்றுவிக்கப்பட்ட ஆலையை மூட வழிவகுக்கலாமா? இது எம்.ஜி.ஆரை அவமதிக்கும் செயலாகும். கரும்பு விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் இந்த ஆலையை மீண்டும் பொலிவுடனும், லாபத்துடனும் நடத்துவதற்கு அரசு முன்வரவேண்டும்' என்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு