Election bannerElection banner
Published:Updated:

கரூரில் தனியார் கம்பெனி நிர்வாகிகளோடு கலெக்டர் 'டெங்கு' குறித்து ஆலோசனை!

கரூரில் தனியார் கம்பெனி நிர்வாகிகளோடு கலெக்டர் 'டெங்கு' குறித்து ஆலோசனை!
கரூரில் தனியார் கம்பெனி நிர்வாகிகளோடு கலெக்டர் 'டெங்கு' குறித்து ஆலோசனை!

கரூரில் தனியார் கம்பெனி நிர்வாகிகளோடு கலெக்டர் 'டெங்கு' குறித்து ஆலோசனை!


 

கரூர் மாவட்டத்தில் உள்ள வங்கியாளர்கள், டெக்ஸ்டைல், ஓட்டல் மற்றும் திருமண மண்டப உரிமையாளர்களுக்கு டெங்குத் தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனை மற்றும் விழிப்பு உணர்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது.
 

அந்தக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர்,"தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுபடி கரூர் மாவட்டத்தில் தீவிர டெங்குத் தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெங்குத் தடுப்பு பணிகளுக்காக நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப் பணியாளர்கள், பொது சுகாதார பணியாளர்கள், பூச்சியியல் வல்லுநர், ஒப்பந்தப் பணியாளர்கள் தொடர்ந்து பணிபுரிந்து வருகிறார்கள். மேலும், ஊர்க்காவல் படை, சாரண சாரணியர்கள், சுயஉதவிக்குழுக்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வலர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் வட்டார மருத்துவர்கள், 400 நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் (என்.எஸ்.எஸ்) என 3,850 நபர்கள் மூலம் பணிகள் நடைபெற்று வருவதுடன், பொதுமக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது. இவர்களின் பணிகளை கண்காணித்திட மாவட்ட அளவிலான அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், கிராமங்கள்தோறும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதுடன் நிலவேம்புக் குடிநீரும் வழங்கப்பட்டு, இப்பணி ஒரு இயக்கம்போல் செயல்பட்டுவருகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வங்கியாளர்களுக்கு தங்களுடைய அலுவலகம், கழிவறை மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாகவும், ஓட்டல் உரிமையாளர்கள் தங்களுடைய சமையல் அறையைத் தூய்மையாக வைத்திருக்கவும், டெக்ஸ்டைல், திருமண மண்டபம் ஆகிய உரிமையாளர்கள் தங்களுடைய வளாகத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்வதுடன் தேவையில்லாத பிளாஸ்டிக் டப்பாக்கள், மண்பாண்டங்கள், உபயோகமற்ற டயர்கள், பிளாஸ்டிக் பைகள் போன்ற பயன்பாடற்ற பொருட்களை அப்புறப்படுத்தி தங்களுடைய வளாகத்தை சுத்தமாக வைத்து தங்களை காத்துக்கொள்வதுடன் மாவட்ட நிர்வாகத்துக்கு சமூக அக்கறையோடு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும், மாவட்டம் முழுக்க உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சிறப்பு மருத்துவ முகாம்களை பயன்படுத்தி தங்கள் பணியாளர்கள் உரிய மருத்துவ பரிசோதனை பெற்றும், நிலவேம்புக் குடிநீரை பருகவும் செய்ய வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு