Election bannerElection banner
Published:Updated:

குமரியில் பழுதடைந்த நிலையில் கடலோர பாதுகாப்பு படகுகள்!

குமரியில் பழுதடைந்த நிலையில் கடலோர பாதுகாப்பு படகுகள்!
குமரியில் பழுதடைந்த நிலையில் கடலோர பாதுகாப்பு படகுகள்!

குமரியில் பழுதடைந்த நிலையில் கடலோர பாதுகாப்பு படகுகள்!

கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க கடலோரப் பகுதிகளில் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு குழும போலீஸ் ஏ.டி.ஜி.பி வன்னியபெருமாள் உத்தரவின் பேரில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க சஜாக் ஆபரேஷன் என்ற பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்காக கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸாருக்குச் சொந்தமான 4 நவீன படகுகள் மூலம் கடலில் ரோந்துப் பணி நடத்தப்படுவது வழக்கம். ஆனால், தற்போது அந்த நான்கு படகுகளும் பழுதடைந்துள்ளதால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. படகுகள் பழுது காரணமாக நேற்று கடலில் படகுகள் மூலம் கண்காணிப்புப் பணி நடத்த முடியவில்லை.

அதற்குப் பதிலாக ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள 48 கடலோரக் கிராமங்களிலும், அதிநவீன ரோந்து வாகனம் மூலம் கண்காணிப்புப் பணியில் கடலோர பாதுகாப்புக் குழும போலீஸார் ஈடுபட்டனர். கடலோரப் பாதுகாப்பு குழும போலீஸாருக்குச் சொந்தமாக 11 சோதனைச் சாவடிகள் உள்ளன. கன்னியாகுமரி, தேங்காய்ப்பட்டினம், மகாதானபுரம் உள்ளிட்ட 11 சோதனைச் சாவடிகளிலும் தீவிர வாகன சோதனையும் நடத்தப்பட்டது. இந்தியாவின் தென்கோடிப் பகுதியில் கடலோர பாதுகாப்பு பலவீனமாக இருக்கிறது. இதை தமிழக அரசு கண்டுகொள்ளுமா?

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு