ஓர் ஓவியம் அச்சு அசலாக, புகைப்படம்போல தத்ரூபமாக இருந்தது என்பதில் பெருமை இல்லை; அது புகைப்படத்துக்கு மாற்றாகவும் இருக்க முடியாது. ஓவியத்தில் புகைப்படத்தை மீறிய உயிர்ப்பு தேவையாக இருக்கிறது.

கோபுலு வரைந்த ஓவியத்தில் இருந்து அதற்கு ஓர் உதாரணம்...

அது ஆனந்த விகடனில் வெளிவந்தது. அந்த நாட்களில் சில குடும்பங்களில் மாதத்துக்கு ஒரு முறை விளக்கெண்ணெய் வைபவம் நடக்கும். குழந்தைகளுக்கு ஒரு கரண்டி விளக்கெண்ணெய் கொடுப்பார்கள். வயிறு சுத்தமாகும் என்பதற்கான ஏற்பாடு. குழந்தைகள் அன்றைய நாளில் என்ன பாடுபடும் என்பதை இந்தப் படம் காட்டுகிறது. சைலன்ட் ஜோக். எத்தனைக் கல்நெஞ்சக்காரனும் இந்தப் படத்தை மெல்லிய புன்னகை சிந்தாமல் கடக்க முடியாது.

சிறுவன் குமட்டலோடு மூக்கைப் பிடித்துக்கொண்டு எண்ணெயைக் குடிக்காமல் அடம்பிடிக்கிறான். பாட்டி ஒரு சிறுவனிடம் விளக்கெண்ணெயின் பெருமையை விளக்கிக் கொண்டிருக்கிறார். அம்மாவின் முகத்தில் அவனாகக் குடிக்கிறானா, இல்லை ஒரு போடு போட்டு குடிக்க வைக்கலாமா என்ற சிந்தனை. அப்பா விசிறியை திருப்பிப் பிடித்துக்கொண்டு அதட்டுகிறார். தாத்தாவோ கையை இடுப்பில் வைத்தபடி, ‘இந்தக் காலத்துப் பசங்க நல்லது சொன்னா கேட்க மாட்டேங்கறாளே’ என்ற மெல்லிய வருத்தத்தோடு பையனைப் பார்க்கிறார். தாத்தாவின் கால்களுக்கிடையே மறைந்தபடி ஒரு வாண்டு தப்பிக்க முடியுமா என தருணம் பார்க்கிறது. ஏற்கெனவே விளக்கெண்ணெய் புகட்டப்பட்ட மூன்று சிறுவர்கள் அழுகையும் குமட்டலுமாக கதறிக்கொண்டிருக்கிறார்கள். சற்றே வயதில் மூத்த இரண்டு சிறுவர்கள் அடம்பிடிப்பதா, அழுவதா, கஷ்டப்பட்டு விழுங்குவதா என தீர்மானிக்க முடியாத நிலையில் நிற்கிறார்கள். பின்னணியில் ஒரு மிடில் கிளாஸ் பிராமண வீடு.

ஒரு புகைப்படத்தால் சித்திரிக்க முடியாததை இந்தச் சித்திரம் சித்திரிக்கிறது. ஒவ்வொருவரின் முகபாவம் அசாத்தியமானது. மிரட்டல், கெஞ்சல், துயரம், பொறுமை, ஏமாற்றம் என நவரசங்கள் இந்த முகங்களில் துலங்குகிறது. அதுதான் கோபுலு.

‘தில்லானா மோகனாம்பாள்’, ‘துப்பறியும் சாம்பு’, ‘ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்’, ‘ஜெயகாந்தனின் முத்திரைக்கதைகள்’, சாவியின் ‘வாஷிங்டனில் திருமணம்’, கலைஞரின் ‘குறளோவியம்’, ‘பொன்னர் சங்கர்’ எல்லாம் இன்னமும் கதாபாத்திரங்களாக மனதில் உறங்குகின்றன... அவரோ, ஏப்ரல் 29-ம் தேதி 91-ம் வயதில் சென்னையில் மீளா உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டார்.
உலகப் பணக்காரர்களில் முதல் இடத்தில் இருந்த அமெரிக்க முதலாளி ராக்பெல்லர் அங்கு தமிழ் முறைப்படி ஒரு திருமணம் செய்ய நினைக்கிறார். அதுதான் வாஷிங்டனில் திருமணத்தின் அடிச்சரடு. அந்தக் கற்பனைச் சித்திரத்துக்கு உயிர் தந்தவர் கோபுலு.

சில ஓவியர்கள் கார்ட்டூன் வரைவார்கள். சிலர் படக் கதை வரைவார்கள். சிலர் வண்ண ஓவியங்கள் தீட்டுவதில் வல்லவராக இருப்பார்கள். இந்த எல்லா வகை ஓவியங்களிலும் வல்லவராக இருப்பது அபூர்வம். கோபுலு அந்த வகையில் ஓர் அபூர்வ கலைஞர். ஆனந்த விகடனில் 1944 முதல் 1968 வரை பணியாற்றினார். 1,000 இதழ்களுக்கு அட்டைப் படம் வரைந்தார் என்பது கின்னஸில் பொறித்திருக்க வேண்டிய சாதனை. ஆனால் அவருடைய சாதனைகள் அதற்கும் மேலே என்பதுதான் உண்மை.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என அட்டைப்படம் வரைந்தார். காலத்தை முன்னோக்கிப் பார்த்த கலைஞனின் தரிசனம் அது.

- தமிழ்மகன்