Published:Updated:

கமலை தொடர்ந்து 'மொபைல் ஆப்' துவங்குகிறார் விஷால்

கமலை தொடர்ந்து 'மொபைல் ஆப்' துவங்குகிறார் விஷால்
கமலை தொடர்ந்து 'மொபைல் ஆப்' துவங்குகிறார் விஷால்

நடிகர் கமல்ஹாசனைத் தொடர்ந்து, சமூக நலத்திட்ட உதவிகளுக்காக 'மொபைல் ஆப்' ஒன்றை துவங்க இருப்பதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார் . அதற்கு 'விஷால்' (V Shall) எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கமலை தொடர்ந்து 'மொபைல் ஆப்' துவங்குகிறார் விஷால்

கல்வி, மருத்துவம், விவசாயம், இயற்கை சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக இந்த அப்ளிகேஷனை தொடங்க இருப்பதாக நடிகர் விஷால் கூறியுள்ளார். இதற்காக ஒரு குழுவையும் விஷால் உருவாக்கி உள்ளார்.  இந்த மொபைல் ஆப் மூலம் மக்களுடன் எளிதில் தொடர்பில் இருக்க முடியும் என்றும் விஷால் கூறியுள்ளார். கல்வி, மருத்துவம், விவசாயம் சார்ந்த பிரச்னைகளில் உதவ முன்வருபவர்களை இந்த ஆப் மூலம் இணைக்க முடியும் என்றும் விஷால் நம்பிக்கை தெரிவித்துள்ளார். டிசம்பர் 15-ம் தேதி இந்த மொபைல் ஆப் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

நடிகர் கமல்ஹாசன், நற்பணி இயக்கத்தாரையும், மக்களையும் இணைக்கும் பொருட்டு மொபைல் ஆப் ஒன்றை தனது பிறந்தநாளான நவம்பர் 7-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளார். அவரைத் தொடர்ந்து நடிகர் விஷாலும் சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாக மொபைல் ஆப் அறிமுகம் செய்ய இருக்கிறார்.