Published:Updated:

வேலூரில் காலாவதியான பொருட்களை நூதன முறையில் விற்பனை செய்த கும்பல்! 

வேலூரில் காலாவதியான பொருட்களை நூதன முறையில் விற்பனை செய்த கும்பல்! 
வேலூரில் காலாவதியான பொருட்களை நூதன முறையில் விற்பனை செய்த கும்பல்! 

வேலூர் மாவட்டம் பொய்கை அடுத்த இறையங்காடு கிராமத்தில் உள்ள ஒரு குடோனில், காலாவதியான பாக்கெட் உணவுப் பொருட்களை வாங்கி, அதன் பழைய தேதியை அழித்துவிட்டு மறுதேதியை  அச்சிட்டு விற்பனை செய்யப்படுவதாக ரவமணி என்பவர் ஆட்சியர் ராமனிடம் புகார் அளித்துள்ளார். அதனையடுத்து அங்கு உணவுப்பொருள் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று மாலை  சோதனை செய்ததில், பிரபல நிறுவனமான தஞ்சாரா உணவுப்பொருள் நிறுவனத்தின் பெயரில் உள்ள காலாவதியான உணவுப்பொருட்களை, காட்பாடியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவன் குறைந்த விலைக்கு பாக்கெட்டுடன் வாங்கி, காலாவதி தேதியை அழித்துவிட்டு, மறுதேதி அச்சிட்டு கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வந்தது தெரியவந்துள்ளது.

வேலூரில் காலாவதியான பொருட்களை நூதன முறையில் விற்பனை செய்த கும்பல்! 

இதையடுத்து, அதிகாரிகள் அந்த குடோனுக்கு சீல் வைத்தனர். குடோனில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். ரவிச்சந்திரன் தலைமறைவாக உள்ளான். இதுகுறித்து உணவுப்பொருட்கள் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், ’தஞ்சாரா என்ற பெயரில் உள்ள நிறுவனத்தின் காலாவதியான உணவுப்பொருள் பாக்கெட்டுகள் அங்கு மூட்டை மூட்டையாக இருந்தன. காலாவதியான மிளகுத் தூள், மல்லித் தூள், மிளகாய்த் தூள், சாம்பார் பொடி, இட்லி பொடி, குழந்தைகள் சாப்பிடும் ஸ்நாக்ஸ் போன்ற 150  பொருட்களின் தயாரிப்பு மற்றும் காலவதி தேதியை அழித்து, புதிய தேதியை அச்சிட்டு விற்பனை செய்துள்ளனர்.

வேலூரில் காலாவதியான பொருட்களை நூதன முறையில் விற்பனை செய்த கும்பல்! 

பாக்கெட்டில் உள்ள தேதியை ஒருவிதமான ராசாயனத்தை பயன்படுத்தி அழித்துள்ளனர். மறுதேதியை லேசர் எலக்ட்ரானிக் மெஷின் மூலம் அச்சிட்டுள்ளனர். மேலும், பாக்கெட்டில் உள்ள பொருட்களை பிரித்து பார்த்து அதில் புழு வைத்திருந்தாலோ அல்லது பூரணம் பிடித்திருந்தாலோ அந்த பாக்கெட்களை மொத்தமாக பிரித்து ஒரு எலக்ட்ரானிக் மெஷினில் கொட்டி அதை மறுசுழற்சி செய்து மீண்டும் பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்துள்ளனர். காலாவதியான உணவுப்பொருட்கள் மற்றும் தேதி அச்சிடும் இயந்திரம் மறுசுழற்சி செய்யும் இயந்திரம் ஆகியவற்றின் மதிப்பு மூன்று கோடி இருக்கும் என்றனர். தேதி மாற்றப்பட்ட பொருட்கள் கடைகளில் விற்பனை செய்வதை தடுக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறனர்.

இந்தப் பொருட்கள் தமிழ்நாடு முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்பட்டது தெரியவந்துள்ளது’ என்றனர். பாக்கெட்டில் அடைத்து விற்க்கப்படும் உணவு பொருட்களை மக்கள் வாங்கும் பொழுது பாக்கெட்டோடு பயன் படுத்த வேண்டாம். பாக்கெட்டில் இருந்து வேறு டப்பாவிள் கொட்டி அதில், புழு பூச்சி ஏதாவது இருக்கிறதா என்று முதலில் பார்க்கவும். அதன் பின்பு அதன் நிறம் மாறாமல் உள்ளதா எனவும் பொருளின் வாசத்தை நுகரவும் மற்றும் தயாரிப்பு தேதி மற்றும் காலவதி தேதி குறிப்பிடாமல் உள்ள பாக்கெட் பொருட்களை பயன்படுத்த வேண்டாம். குழந்தைகளுக்கு தரும் ஸ்நாக்ஸ்கள் தருவதில் கவனமாக இருக்கவேண்டும்.