Published:Updated:

'கலெக்டர் எப்படி இருப்பாங்க?'- சேலம் ஆட்சியர் ரோஹிணியிடம் நெகிழ்ந்த மாணவிகள்!

'கலெக்டர் எப்படி இருப்பாங்க?'- சேலம் ஆட்சியர் ரோஹிணியிடம் நெகிழ்ந்த மாணவிகள்!
'கலெக்டர் எப்படி இருப்பாங்க?'- சேலம் ஆட்சியர் ரோஹிணியிடம் நெகிழ்ந்த மாணவிகள்!
'கலெக்டர் எப்படி இருப்பாங்க?'- சேலம் ஆட்சியர் ரோஹிணியிடம் நெகிழ்ந்த மாணவிகள்!


முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த தினம் இந்தியா முழுவதும் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகள் தினத்தை ஒட்டி, சேலம் கலெக்டர் ரோஹிணி தன் அலுவலகத்திற்கு மாநகராட்சியில் உள்ள 3 பள்ளிகளிலிருந்து 60 குழந்தைகளைக் அழைத்து, அவர்களுக்குப் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பிறகு, குழந்தைகளிடம் கலெக்டரின் அன்றாட பணிகளை விளக்கிக் கூறியதோடு, சேலம் தனி மாவட்டமாக உருவானதிலிருந்து, இன்று வரை உள்ள கலெக்டர்கள் பெயர் பலகையைக் காட்டினார்.

'கலெக்டர் எப்படி இருப்பாங்க?'- சேலம் ஆட்சியர் ரோஹிணியிடம் நெகிழ்ந்த மாணவிகள்!

குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்து மகிழ்ந்தார். பிறகு ஒவ்வொரு துறைக்கும் அழைத்துச் சென்று துறைத் தலைவர்களை அறிமுகம் செய்ததோடு, அவர்களின் பணிகளையும் விளக்கிக் கூறினார். பிறகு ஆட்சியர் அலுவலகத்தின் உள்ளரங்கில் குழந்தைகளை அமரவைத்து அவர்களோடு கலந்துரையாடல் நடத்தினார். அந்தக் கலந்துரையாடலின் போது சில குழந்தைகள், 'எங்க பெற்றோர்கள் நீ படித்து கலெக்டர் ஆக வேண்டும் என்று சொல்லுவார்கள். ஆனால் கலெக்டர் எப்படி இருப்பாங்க என்று கூட தெரியாது. ஆனால் நீங்கள் எங்களை  பூங்கொத்து கொடுத்து வரவழைத்து, பல அதிகாரிகளை எங்களுக்கு அறிமுகம் செய்துவைத்த இந்த குழந்தைகள் தின விழாவை எங்களால் மறக்க முடியாது' என்றனர்.

'கலெக்டர் எப்படி இருப்பாங்க?'- சேலம் ஆட்சியர் ரோஹிணியிடம் நெகிழ்ந்த மாணவிகள்!

இந்தக் குழந்தைகளை அழைத்து வந்த மாநகராட்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியை ஜெமில்தாமேரி, 'அரசுப் பள்ளிக் கூடங்களில் குழந்தைகள் தினம் பெரிய அளவில் கொண்டாட மாட்டோம். குழந்தைகளுக்கு வாழ்த்துகளைச் சொல்லுவதோடு அன்று ஒரு நாள் குழந்தைகள் தவறு செய்தாலும் கண்டிக்க மாட்டோம். குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு சேலம் கலெக்டர் அலுவலகத்திலிருந்து எங்க மாநகராட்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, அம்மாப்பேட்டை ஸ்கூல், பாவடி ஸ்கூல் என 3 பள்ளியிலிருந்து 6, 7ம் வகுப்புப் படிக்கும் 60 குழந்தைகளை வரச்சொல்லி இருந்தார்கள்.

அதையடுத்து இன்று காலை நாங்கள் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்குச் சென்றோம். கலெக்டர் போர்டிக்கோவிற்கு வந்து குழந்தைகளுக்குப் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பிறகு  தன்னுடைய கேபினுக்கு அழைத்துச் சென்று அவருடைய பணிகள் அனைத்தையும் குழந்தைகளிடம் சொல்லியதோடு குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்து மகிழ்ந்தார்.

பிறகு ஒவ்வொரு துறைக்கும் அழைத்துச் சென்று அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்தார். என் வாழ் நாளில் இப்படி ஒரு கலெக்டரை சந்தித்ததில்லை. உண்மையான குழந்தைகள் தினத்தை சேலம் கலெக்டர் கொண்டாடி இருப்பது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்நாளில் மறக்க முடியாத தருணமாகவும் இது இருக்கும்'' என்றார்.