Published:Updated:

இழப்பீட்டு தொகையை உயர்த்தினால் கூடங்குளம் திட்ட செலவு அதிகரிக்கும்: ரஷ்யா

புதுடெல்லி: அணு உலை விபத்து இழப்பீட்டு தொகையை உயர்த்தினால் கூடங்குளம்  திட்ட செலவு அதிகரிக்கும் என்று ரஷ்ய துணை பிரதமர் டிமித்ரி ரோகோசின்  தெரிவித்துள்ளார்.

இந்தியா-ரஷ்யா இடையே வர்த்தகம், பொருளாதாரம், விஞ்ஞானம், தொழில்நுட்பம்,  கலாசார ஒத்துழைப்பு தொடர்பான கமிஷனின் கூட்டம் டெல்லியில் இன்று  நடைபெறுகிறது.

இதில் பங்கேற்க டெல்லி வந்த டிமித்ரி ரோகோசின் செய்தியாளர்களுக்கு அளித்த  பேட்டியில்,"கூடங்குளம் அணு உலையை மிகவும் பாதுகாப்பான முறையில்  வடிவமைத்துள்ளோம். கடந்த 1986ம் ஆண்டு நடைபெற்ற செர்னோபில் அணு உலை  விபத்தால், அணு உலை ஆபத்துகளை நாங்கள் உணர்ந்துள்ளோம். எனவே, அதிநவீன  தொழில்நுட்பத்துடன் வடிவமைத்துள்ளோம். உலகிலேயே இதுதான் மிகவும் நம்பகமான  அணு உலை.

##~~##
அணுகுண்டு சோதனை நடத்தியதால்,இந்தியா மீது உலக நாடுகள் பொருளாதார தடை  விதித்தபோதுகூட, நாங்கள் இந்தியாவுக்கு ஆதரவு அளித்ததை மறந்துவிடக்கூடாது.
அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால் அளிக்கப்படும் இழப்பீட்டுத் தொகையை உயர்த்தித்  தரவேண்டும் என்று இந்தியாவில் கோரிக்கை எழுந்துள்ளது. அப்படி இழப்பீட்டுத்  தொகையை நாங்கள் அதிகரித்தால்,கூடங்குளத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது  அணு உலைகளின் திட்டச்செலவும் அதிகரித்து விடும்.எனவே, இந்தியா அதிக பணம் தர  வேண்டி இருக்கும்” என்றார்.