Published:Updated:

சட்டசபை வைர விழா: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு நேரில் அழைப்பு!

சட்டசபை வைர விழா: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு நேரில் அழைப்பு!
சட்டசபை வைர விழா: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு நேரில் அழைப்பு!
சட்டசபை வைர விழா: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு நேரில் அழைப்பு!

சென்னை:ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை இன்று நேரில் சந்தித்த தமிழக சட்டசபை  சபாநாயகர் தனபால் மற்றும் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்,தமிழக சட்டசபை  வைர விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.
 
தமிழக சட்டசபையின் வைரவிழா அடுத்த மாதம் 30-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த  விழாவை கோலாகலமாக நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதையொட்டி கடற்கரை  ரோட்டில் போர் நினைவு சின்னம் அருகே வைரவிழா நினைவு வளைவு  அமைக்கப்படுகிறது.

முதல்மைச்சர் ஜெயலலிதா வருகிற 29-ம் தேதி காலை இதற்கான அடிக்கல்  நாட்டுகிறார்.

##~~##
இதற்கிடையே இன்று சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், நத்தம்  விசுவநாதன்,தம்பித்துரை எம்.பி. ஆகியோர் டெல்லி சென்று ஜனாதிபதி  பிரணாப்முகர்ஜியை சந்தித்து சட்டசபை வைரவிழாவில் பங்கேற்குமாறு நேரில் அழைப்பு  விடுத்தனர்.
இதற்கான அழைப்பிதழையும் வழங்கினார்கள்.ஆனால் ஏற்கனவே அன்றைய தேதியில்  ஏற்கனவே இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தாம் ஒப்புக்கொண்டுள்ளதாக பிரணாப்  கூறியதாகவும்,இதனால் அவர் வைர விழா கொண்டாட்டத்தில் கலந்துகொள்வது  சந்தேகம்தான் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.