Published:Updated:

காவிரி:தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு!

விகடன் விமர்சனக்குழு
காவிரி:தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு!
காவிரி:தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு!
காவிரி:தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு!

புதுடெல்லி: காவிரியிலிருந்து தமிழகத்திற்கு நவம்பர் 15 ம் தேதிக்குள் 5.5 டி.எம்.சி.  தண்ணீரை திறந்துவிடுமாறு,கர்நாடக மாநிலத்திற்கு காவிரி கண்காணிப்புக் குழு  உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் இன்று மத்திய நீர்ப்பாசனத்துறை செயலர் டி.வி. சிங் தலைமையில்.காவிரி  கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழகத்திற்கு வருகிற நவம்பர் 15 ம் தேதிக்குள் 4 டி.எம்.சி. தண்ணீர்  திறந்து விட வேண்டும் என்றும், ஏற்கனவே வழங்கவேண்டிய நிலுவையில் உள்ள 1.5 

##~~##
டி.எம்.சி. தண்ணீரையும் சேர்த்து மொத்தம் 5.5 டி.எம்.சி. தண்ணீரை  திறந்துவிடுமாறும் கண்காணிப்புக் குழு, கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது.
மேலும் அடுத்தக்கூட்டம் வருகிற நவம்பர் 15 ம் தேதியன்று மீண்டும் கூடும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.