Published:Updated:

எல்.பி.ஜி. சிலிண்டர் விலை ரூ. 922 ஆக உயர்வு!

Vikatan Correspondent
எல்.பி.ஜி. சிலிண்டர் விலை ரூ. 922 ஆக உயர்வு!
எல்.பி.ஜி. சிலிண்டர் விலை ரூ. 922 ஆக உயர்வு!
எல்.பி.ஜி. சிலிண்டர் விலை ரூ. 922 ஆக உயர்வு!

புதுடெல்லி: மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 26.50 ரூபாய்  உயர்த்தப்பட்டு,ரூ.922 ஆக விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு அண்மையில் கட்டுப்பாடு விதித்த மத்திய அரசு,  ஆண்டு ஒன்றுக்கு இனி 6 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும்  என்றும், அதற்கு மேல் வாங்கக் கூடிய சிலிண்டர் ஒவ்வொன்றும் மானியம் அல்லாத  கூடுதல் விலை கொடுத்தே வாங்க வேண்டும் என அறிவித்தது.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியபோதிலும், மத்திய அரசு தனது நிலையில் உறுதியாக  இருந்துவிட்டது.

##~~##
இந்நிலையில் வீடுகளுக்கு வழங்கப்படும் மானியம் அல்லாத 14.2 கிலோ கொண்ட  சிலிண்டர் ஒன்றின் விலை, 26.50 ரூபாய் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மானியம் அல்லாத சிலிண்டர் ஒன்றின் விலை இனி ரூ. 922 ஆக இருக்கும்  என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.