Published:Updated:

எல்.பி.ஜி. சிலிண்டர் விலை உயர்வு நிறுத்தி வைப்பு!

எல்.பி.ஜி. சிலிண்டர் விலை உயர்வு நிறுத்தி வைப்பு!
எல்.பி.ஜி. சிலிண்டர் விலை உயர்வு நிறுத்தி வைப்பு!
எல்.பி.ஜி. சிலிண்டர் விலை உயர்வு நிறுத்தி வைப்பு!

புதுடெல்லி: மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 26.50 ரூபாய் நேற்று உயர்த்தப்பட்ட நிலையில்,இந்த விலை உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு அண்மையில் கட்டுப்பாடு விதித்த மத்திய அரசு,  ஆண்டு ஒன்றுக்கு இனி 6 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும்  என்றும், அதற்கு மேல் வாங்கக் கூடிய சிலிண்டர் ஒவ்வொன்றும் மானியம் அல்லாத  கூடுதல் விலை கொடுத்தே வாங்க வேண்டும் என அறிவித்தது.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியபோதிலும், மத்திய அரசு தனது நிலையில் உறுதியாக இருந்துவிட்டது.

##~~##
இந்நிலையில் வீடுகளுக்கு வழங்கப்படும் மானியம் அல்லாத 14.2 கிலோ கொண்ட  சிலிண்டர் ஒன்றின் விலை, 26.50 ரூபாய் உயர்த்தப்படுவதாக இந்தியன் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நேற்று அறிவித்தது.
இதன்படி மானியம் அல்லாத சிலிண்டர் ஒன்றின் விலை இனி ரூ. 922 ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த விலை உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.