Published:Updated:

செல்போன் கட்டணம் உயரும்?

செல்போன் கட்டணம் உயரும்?
செல்போன் கட்டணம் உயரும்?
செல்போன் கட்டணம் உயரும்?

புதுடெல்லி: ஸ்பெக்ட்ரம் உரிமத்திற்கு ஒரே தவணையாக கட்டணம் செலுத்தும் முறைக்கு  மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

ஏற்கனவே சந்தையில் உள்ள நிறுவனங்களுக்கு இந்த முறை பொருந்தும். இதன்மூலம்  31 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் அரசுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசின் இந்த முறையால் செல்போன் கட்டணங்கள் உயர வாய்ப்பு இருப்பதாகக்  கூறப்படுகிறது.  இதுதவிர 4 புள்ளி 4 மெகாஹெர்ட்ஸ் 2 ஜி  அலைவரிசையை  பயன்படுத்தும் ஜிஎஸ்எம் சேவை நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்  என்பதற்கும் அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.

##~~##
இதேபோன்று 6 புள்ளி 2 மெகாஹெர்ட்சுக்கு அதிகமாக பயன்படுத்தும் நிறுவனங்கள்  ஜூலை 2008 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள  கட்டணமும்  செலுத்தவேண்டும்.

மேலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மருந்துக் கொள்கைக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பான முடிவை மத்திய அமைச்சரவை தள்ளி வைத்துள்ளது.