Published:Updated:

`இனி கவிஞரின் சம்மதத்தைக் கேட்டுவிட்டு விருது கொடுக்க வேண்டும்!' - சொல்கிறார் வைரமுத்து

`கவிஞர் இன்குலாப்பிற்கு வழங்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதை ஏற்கவும், மறுக்கவும் அவரது குடும்பத்திற்கு முழு உரிமை உண்டு. சரியான கவிஞருக்கு தாமதமாகக் கொடுக்கப்பட்ட விருது இது' என்று கோவையில் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

கோவை மதுக்கரையில் உள்ள பிருந்தாவன் பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த வைரமுத்து பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, `கவிஞர் இன்குலாப்பிற்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது என்பது சரியான கவிஞருக்கு தாமதமான விருது. அவ்விருதை ஏற்கவும், மறுக்கவும் அவரது குடும்பத்திற்கு முழு உரிமை உண்டு. விருது கொடுக்கும் முன்பே உங்களுக்கு விருதை தரவிருக்கிறோம். அதை பெற்றுக்கொள்ள உங்களுக்கு சம்மதமா என்று கவிஞர்களிடம் கேட்டு ஒப்புதல் பெற வேண்டும். அப்படிச் செய்தால், எந்த பிரச்னையும் இருக்காது' என்றார்.

2ஜி வழக்கு தீர்ப்பு தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு உற்சாகத்தையும், அவரது கடைசி காலத்தில் நிம்மதியையும் தந்துள்ளது. கருணாநிதி முகமும், அகமும் மலர்ந்துள்ளது. இவ்வழக்கு ஒரு கட்சியின் மீது மட்டுமின்றி, தமிழ் சமூகத்தின் மீது வாரி இறைக்கப்பட்ட  சேறு அது இந்த தீர்ப்பின் மூலம் அகன்றுள்ளது. ஒகி புயல் நிவாரணப் பணிகளை அரசு போதிய அளவு செய்யவில்லை. கல்வித் தரம் மேம்பட மாணவர்களுக்கு தேர்வு வைப்பது போல ஆசிரியர்களுக்கும் குறிப்பிட்ட கால இடைவெளியில் மேம்பாட்டு தேர்வு வைக்க வேண்டும். அரசு பள்ளிகள் மேம்படும் போதுதான் இந்த நாட்டின் தரம் உயரும்.
அரசியல் என்பதும் ஒரு சமூக விஞ்ஞானம் அதைக் முழுமையாக புரிந்துகொண்டால் தான்  எதிர்காலத்தில் ஒரு கட்சி பயணிக்க முடியும். அந்த சமூக விஞ்ஞானம் அ.தி.மு.கவிற்க்கு இருக்கிறதா என்று காலம் பதில் சொல்லும். 2ஜி தீர்ப்பைப் போல ஆர்.கே.நகர் இடை தேர்தல் முடிவையும் எதிர்நோக்கி காத்திருக்கிறோம்.

அடுத்த கட்டுரைக்கு