Published:Updated:

நினைவிடம் அமைக்கும் பணி! - ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லத்தில் அதிகாரிகள் ஆய்வு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக்கும் வகையில் சென்னை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது.

ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் 'வேதா நிலையம்' நினைவிடமாக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி அறிவித்தார். முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மகள் தீபா ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்தனர். வேதா நிலையம் இல்லத்தை நினைவிடமாக்கும் முன் தங்களிடம் உரிய அனுமதி பெற்று அதற்கான பணிகளைத் தொடங்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தீபக் சார்பில் கடிதம் எழுதப்பட்டது. முதற்கட்டமாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் போயஸ் கார்டன் வேதா இல்லத்தை அளவிடும் பணிகளில் ஈடுபட்டனர். 

இந்தநிலையில், சென்னை மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் வேதாநிலையம் இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக்கும் பணியின் முதற்கட்டமாக, அந்த இல்லத்தை அரசுடமையாக்கும் வகையில் இந்த ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி போயஸ் கார்டன் இல்லத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் போலீஸ் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.  
 
அடுத்த கட்டுரைக்கு