Published:Updated:

ஜனவரி 5-ல் பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம்! முதலமைச்சர் பழனிசாமி தொடங்கிவைக்கிறார்

ஜனவரி 5-ல் பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம்! முதலமைச்சர் பழனிசாமி தொடங்கிவைக்கிறார்
ஜனவரி 5-ல் பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம்! முதலமைச்சர் பழனிசாமி தொடங்கிவைக்கிறார்

ஜனவரி 5-ல் பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம்! முதலமைச்சர் பழனிசாமி தொடங்கிவைக்கிறார்

தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை ஜனவரி 5-ல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் தொடங்கி வைக்க இருக்கிறார். 


பொங்கல் திருநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் குடும்ப அட்டைதாரர்களுக்குத் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஒரு சில ஆண்டுகளில் பணமாகவும் குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு விநியோகிக்கப்பட்டிருக்கிறது. இந்தநிலையில், 2018-ம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த அறிவிப்பைத் தமிழக அரசு நேற்று வெளியிட்டது. இதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், ‘பொங்கல் திருநாளைத் தமிழ்நாட்டு மக்கள் சிறப்பாகவும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டை உடைய குடும்பங்கள், காவலர் குடும்ப அட்டை பெற்றுள்ள காவலர் குடும்பங்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்கள் ஆகியோருக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீளக் கரும்புத் துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கிய சிறப்புப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

வெல்லம் கையிருப்பு இல்லாத காரணத்தால், பொங்கல் பரிசுத் தொகுப்பில் சர்க்கரை வழங்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்திருந்தார். இந்தநிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை சென்னையில் வரும் ஜனவரி 5-ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்க இருக்கிறார். மாவட்டங்களில் அமைச்சர்கள் அந்தத் திட்டத்தைத் தொடங்கிவைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.  
 

அடுத்த கட்டுரைக்கு