Published:Updated:

நள்ளிரவில் கோயில்களை முற்றுகையிடுவோம்! தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி

நள்ளிரவில் கோயில்களை முற்றுகையிடுவோம்! தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி
நள்ளிரவில் கோயில்களை முற்றுகையிடுவோம்! தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி

நள்ளிரவில் கோயில்களை முற்றுகையிடுவோம்! தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி

பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஆகம விதிகளை மீறும் அறநிலையத்துறையைக் கடுமையாக எச்சரிக்கிறோம். ஜனவரி 1 நள்ளிரவில் கோயில்களில் நடை திறந்தால் முற்றுகைப் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள் இந்து முன்னணியினர்.

அரியலூர், பெரம்பலூர் மாவட்ட இந்து முன்னணி இயக்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் ஜெயங்கொண்டம்  சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் தெருவில் ஒன்றிய தலைவர் ஜோதிடர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட தலைவர் ராஜசேகர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரமேஷ், ராஜா, திருமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஜனவரி 1 ஆங்கிலப் புத்தாண்டு அந்நியர்களின் புத்தாண்டு. இது தமிழர்களின் புத்தாண்டு கிடையாது. ஆங்கிலப் புத்தாண்டு அன்று எந்தக் கோயில்களிலும் சிறப்பு பூஜை எதுவும் செய்யக் கூடாது. நள்ளிரவில் கோயில்களில் நடை திறந்தாலோ அதை எதிர்த்து கோயில்களில் இந்து முன்னணி சார்பாக முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் அரியலூர், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து மாவட்டத் தலைவர் ராஜசேகரிடம் பேசினோம். ''ஜனவரி 1 தமிழர்களின் புத்தாண்டு அல்ல. அந்நியப் புத்தாண்டு. நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுக்க போராடிய கட்டபொம்மன், தீரன் சின்னமலை, வ.உ.சி போன்ற தலைவர்களை எல்லாம் கொடுமைப்படுத்தி அடித்துக் கொன்ற வெள்ளைக் காரர்களுக்குதான் ஜனவரி 1 புத்தாண்டு. இது தமிழனுக்கோ இந்துகளுக்கோ கிடையாது. இதை முதலில் இந்துகள் தெரிந்துகொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல் அறநிலையத்துறை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவே டிசம்பர் 31-ம் தேதி சிறப்பு பூஜை என்ற பெயரில் கொள்ளை அடிக்க வேண்டும் என்பதற்காகவே ஆகம விதிகளை மீறி நடந்துகொண்டிருக்கிறார்கள். இந்து மதத்தில் இரவு 12 மணிக்கு மேல் நடை திறக்கக் கூடாது. இரவு 9 மணியோடு அர்த்தசாம பூஜை முடித்து காலை 4 டு 6 தான் கோயில் நடை திறக்க வேண்டும் எனச் சொல்கிறது. ஆனால், இவர்கள் பணத்துக்காக ஆகம விதிகளை மீறுகிறார்கள். இதைக் கண்டித்து திருச்சியில் சமயபுரம் போன்ற கோயில்களில் அடித்து உடைத்து கோயில்களில் பூட்டுப்போடும் போராட்டத்தை நடத்திய பிறகுதான் கொஞ்சம் குறைவாக இருக்கிறது. எங்களுடயை கோரிக்கை என்னவென்றால்  ஆங்கிலப் புத்தாண்டு அன்று எந்தக் கோயில்களிலும் சிறப்பு பூஜை செய்யக் கூடாது. தமிழ்ப் புத்தாண்டு மட்டுமே கொண்டாட வேண்டும். இதுதான் எங்கள் கோரிக்கை. அதேபோல் ஆந்திராவில் ஆங்கிலப் புத்தாண்டு அன்று சிறப்பு தரிசனம் செய்யக் கூடாது என்று அந்த அரசு தடை விதித்திருக்கிறது. ஆனால், நாம் மட்டும் செய்ய என்ன காரணம் என்று நீங்களே யோசிக்க வேண்டும் மக்களே. இதை அறநிலையத்துறை மீறினால் அதைக் கடுமையாக எச்சரிக்கிறோம். கோயில்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்'' என்று எச்சரித்தார்.

அடுத்த கட்டுரைக்கு