Published:Updated:

ரூ.13,000 ஊதியம்... அரசு ஊழியர்கள்போல் விடுமுறை! துப்புரவுப் பணியாளர்களுக்காக ஒலிக்கும் குரல்

ரூ.13,000 ஊதியம்... அரசு ஊழியர்கள்போல் விடுமுறை! துப்புரவுப் பணியாளர்களுக்காக ஒலிக்கும் குரல்
ரூ.13,000 ஊதியம்... அரசு ஊழியர்கள்போல் விடுமுறை! துப்புரவுப் பணியாளர்களுக்காக ஒலிக்கும் குரல்

ரூ.13,000 ஊதியம்... அரசு ஊழியர்கள்போல் விடுமுறை! துப்புரவுப் பணியாளர்களுக்காக ஒலிக்கும் குரல்

மதுரை எம்.ஜி.ஆர் பேருந்துநிலையம் எதிர்புறம் உள்ள ராமசுப்பு நினைவு அரங்கில் " மனிதக் கழிவகற்றுவோர் வாழ்வும் - மறுவாழ்வும் என்ற தலைப்பில் தூய்மைப் பணியாளர் மறுவாழ்வு மையம் சார்பாக கருத்தரங்கம் நடைபெற்றுவருகிறது. இதற்கு ஆதித்தமிழர் கட்சித் தலைவர் ஜக்கையன், ஒரு மாத இதழ் பொறுப்பாசிரியர் விடுதலை வீரன், வழக்கறிஞர் செல்வ கோமதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஜக்கையன், "மனிதக் கழிவை மனிதர் அள்ளும்போது விஷவாயு தாக்கி ஏற்படும் மரணத்தில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுபோன்ற அவமானத்தைத் துடைத்தெறிய மாநில அரசு சீரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

கையால் மலம் அள்ளுவோர் மறுவாழ்வு சட்டம் 2013ன்படி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் கண்காணிப்பது குழுக்களை உருவாக்கிட வேண்டும். நிரந்தர, ஒப்பந்த தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி, கிராம துப்புரவுப் பணியாளர்களுக்கு அரசு தரமான வீடுகளைக் கட்டிக்கொடுக்கவேண்டும். குறைந்தபட்ச ஊதிய (திருத்தம்) ஆணையின்படி துப்புரவு பணியாளர்கள் அனைவருக்கும் குறைந்தபட்சம் 13 ஆயிரம் அடிப்படை ஊதியமாக அரசு அறிவிக்க வேண்டும். அனைத்து துப்புரவுப் பணியாளர்களுக்கும் ஞாயிறுக்கிழமை விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும். மற்ற துறை அரசுப் பணியாளர்களுக்கு இருக்கின்ற அனைத்து விடுப்புகளும் துப்புரவாளர்களுக்கும் கொடுக்க வேண்டும். துப்புரவுப் பணியை தனியார்மயமாக்கும் கொள்கை முடிவை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும். சுனாமி, புயல் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட தற்காலிக தினக்கூலி துப்புரவு பணியாளர்களை நிரந்தரப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்'' என கேட்டுக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு