Published:Updated:

  வைரலாகும் ரஜினியை போருக்கு அழைக்கும் பாடல்! #VaaThalaivaPoarukuVaa

  வைரலாகும் ரஜினியை போருக்கு அழைக்கும் பாடல்! #VaaThalaivaPoarukuVaa
  வைரலாகும் ரஜினியை போருக்கு அழைக்கும் பாடல்! #VaaThalaivaPoarukuVaa

  வைரலாகும் ரஜினியை போருக்கு அழைக்கும் பாடல்! #VaaThalaivaPoarukuVaa

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 26-ம் தேதி முதல் ரசிகர்களை சந்தித்து வரும் நிலையில் முதல் நாளில் அவர் தனது அரசியல் நிலைப்பாட்டை 31-ந்தேதி (இன்று) தெரிவிப்பதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் ரஜினியின் தீவிர ரசிகரும், நடிகருமான ராகவா லாரன்ஸ், ரஜினி குறித்து ஒரு பாடலை தயாரித்துள்ளார். 'வா தலைவா போருக்கு வா ' என்று தொடங்கும் இந்த மாஸ் பாடல் இன்று வெளியாகியுள்ளது. 

"போதும்... போதும்... பட்டதெல்லாம் போதும்... மாத்துவோம்... யாரு என்ன சொன்னாலும், ஊரை மாத்துவோம்..." என்ற வரிகளில் தொடங்கும் அந்த பாடலில் "எப்ப வருவேன், எப்படி வருவேனு யாருக்கு தெரியாது...",  "போடா, போடா... அந்த ஆண்டவனே நம்ம பக்க இருக்கான்..." போன்ற அவரின் பேவரைட் டயலாக்களும் இடம்பெற்றுள்ளன. 

5.8 நிமிடங்கள் ஓடும் அந்த பாடல் சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பகிர்ந்து அதனை வைரலாக்கி வருகின்றனர். ஏற்கெனவே, இந்த பாடலின் அறிவிப்பு நேற்று வெளியான சில நிமிடங்களிலே #VaaThalaivaPoarukuVaa என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது குறிப்பிடதக்கது. 

 
 

அடுத்த கட்டுரைக்கு