Election bannerElection banner
Published:Updated:

இலங்கைக் கடற்படையினர் கைப்பற்றிய 7 கிலோ தங்கக்கட்டிகள்; சிக்கிக்கொண்ட இருவர்

இலங்கைக் கடற்படையினர் கைப்பற்றிய 7 கிலோ தங்கக்கட்டிகள்; சிக்கிக்கொண்ட இருவர்
இலங்கைக் கடற்படையினர் கைப்பற்றிய 7 கிலோ தங்கக்கட்டிகள்; சிக்கிக்கொண்ட இருவர்

இலங்கைக் கடற்படையினர் கைப்பற்றிய 7 கிலோ தங்கக்கட்டிகள்; சிக்கிக்கொண்ட இருவர்

இலங்கையிலிருந்து இந்தியாவுக்குக் கடத்த முயன்ற ரூ.5 கோடி மதிப்புடைய 7 கிலோ தங்கம், இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

விடுதலைபுலிகள் இயக்கம் இலங்கையில் அழிக்கப்பட்ட பின், பாக் நீரிணைப் பகுதியான வங்கக் கடல் வழியாக நடைபெறும் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு கடல் மார்க்கமாக மட்டுமல்லாமல், வான் வழியாகவும் தங்கக் கட்டிகள் கடத்திவரும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்துவருகின்றன. சமீப காலமாக, இந்த தங்கக் கடத்தல் அதிகரித்துவருகிறது. இதே போல, இந்திய கடல் பகுதி வழியாக கஞ்சா, போதை மாத்திரைகள், ஹெராயின் போன்ற போதைப் பொடிகள், பீடி பண்டல்கள், கடல் அட்டைகள் ஆகியன இலங்கைக்கு கடத்திச் செல்வதும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நேற்றிரவு இலங்கையின் வடக்கு கடல் பகுதியான காங்கேசன்துறையில், சந்தேகத்துக்கு இடமான முறையில் வந்த பிளாஸ்டிக் படகை இலங்கைக் கடற்படையினர் தடுத்துநிறுத்தி சோதனையிட்டனர். இந்தச் சோதனையின்போது, அந்தப் படகில் மறைத்துவைக்கப்பட்டிருந்த சுமார் 7 கிலோ எடைகொண்ட தங்கக் கட்டிகள் சிக்கியது. பிஸ்கட் வடிவில் உருவாக்கப்பட்டிருந்த இந்த தங்கக் கட்டிகளைப் பறிமுதல்செய்த இலங்கைக் கடற்படையினர், அந்தப் படகில் இருந்த இருவரையும் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல்செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு, சுமார் 5 கோடி எனக் கூறப்படுகிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு