Election bannerElection banner
Published:Updated:

பணி நிரந்தரம் கோரி டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்!

பணி நிரந்தரம் கோரி டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்!
பணி நிரந்தரம் கோரி டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்!

பணி நிரந்தரம் கோரி டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்!

பணி நிரந்தரம், மிகை பணிக்கு மிகை ஊதியம், காலமுறை ஊதியம் போன்ற 25 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சென்னை அண்ணாசாலையில் உள்ள டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தப்பட்டுவருகிறது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ``தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின்கீழ் செயல்பட்டுவரும் டாஸ்மாக் நிறுவனத்தில் கடந்த 14 ஆண்டுகாலமாகச் சுமார் 27,000 பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்குத் தொகுப்பூதியம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 240 நாள்கள் வீதம் 2 ஆண்டுகளில் 480 நாள்கள் பணியாற்றினால் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் முதலியன வழங்கப்பட வேண்டும் என்று தொழிலாளர் நலச் சட்டங்கள் வலியுறுத்துகின்றன. இதுகுறித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவும் அமல்படுத்தவில்லை. மேலும், தமிழக அரசு மூடிய மதுபானக் கடைகளில் பணியாற்றி வந்த ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்குவதில் தொடர் பிரச்னை நிலவிவருகிறது.

மது அதிகமாக விற்பனையாகும் கடைகளில் குறைந்த பணியாளர்களும் குறைவாக விற்பனையாகும் கடைகளில் அதிக பணியாளர்களையும் நியமித்து பாரபட்சம் காட்டிவரும் மாவட்ட மேலாளர்களின் நடவடிக்கையால் டாஸ்மாக் பணியாளர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். டாஸ்மாக் துறையில் ஊழல் மலிந்துள்ளதால் மாவட்ட மேலாளர்கள், மண்டல மேலாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு அவர்களால் உருவாக்கப்பட்ட இடைத்தரகர்களை ஒழிக்க வேண்டும்’’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு