Published:Updated:

’’தலைமன்னார் வழியாக இந்தியாவுக்குத் தங்கம் கடத்த முயற்சி!’’ 12 கிலோ தங்கத்துடன் இருவர் கைது

 இந்தியாவுக்குக் கடத்தப்பட இருந்த 70 மில்லியன் ரூபாய் மதிப்பிலான 12 கிலோ தங்கம் இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

தலைமன்னார் வழியாக இந்தியாவிற்கு தங்கம் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலை அடுத்து இலங்கைக் கடற்படையினர் ரோந்து பணியைத் தீவிரப்படுத்தினர். இந்தநிலையில், சந்தேகத்திற்கிடமான இருவரை இலங்கைக் கடற்படையினர் நேற்று (28.1.2018) மாலை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 120 தங்கக் கட்டிகளைக் கொண்ட 12 கிலோ கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கைக் கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கக் கட்டிகளை கடத்த முயன்ற இலங்கையைச் சேர்ந்த அந்த இருவரும் தலைமன்னார் கிராமக் கடற்பகுதியிலிருந்து இந்தியாவிற்கு சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்ல முற்பட்ட போது இலங்கைக் கடற்படையினரினால் சுற்றி வளைக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் மீட்கப்பட்ட 12 கிலோ தங்கம் ஆகியவை அடுத்தகட்ட விசாரணைக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகளிடம் இலங்கைக் கடற்படையினர் ஒப்படைத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு