Published:Updated:

``பெட்டி வாங்கிக் கொண்டுதான் பேருந்துக் கட்டணம் உயர்த்தினார்கள்!" தடதடக்கும் செந்தில் பாலாஜி

எம்.புண்ணியமூர்த்தி
``பெட்டி வாங்கிக் கொண்டுதான் பேருந்துக் கட்டணம் உயர்த்தினார்கள்!" தடதடக்கும் செந்தில் பாலாஜி
``பெட்டி வாங்கிக் கொண்டுதான் பேருந்துக் கட்டணம் உயர்த்தினார்கள்!" தடதடக்கும் செந்தில் பாலாஜி
``பெட்டி வாங்கிக் கொண்டுதான் பேருந்துக் கட்டணம் உயர்த்தினார்கள்!" தடதடக்கும் செந்தில் பாலாஜி

கோவை பாப்பநாயக்கன் புதூரில் தினகரன் அணியின்  நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய முன்னாள் போக்குவரத்து அமைச்சர் செந்தில் பாலாஜி, ``முதுகெலும்பு இல்லாதவர் முதல்வராக இருப்பதால் நாம் தமிழகத்தின் பல்வேறு உரிமைகளைக் இழந்துவருகிறோம். பொதுமக்கள் யாரும் எடப்பாடி பழனிசாமியை சி.எம்- ஆக நினைப்பதில்லை. அதனால்தான் அவர் தனது காரில் சி.எம் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறார். எடப்பாடி அரசு தமிழகத்தை பி.ஜே.பியிடம் அடமானம் வைத்துள்ளது.

இந்தக் கூட்டத்துக்கு வந்திருப்பவர்கள்தான் கழகத்துக்கு சீனியர்கள். தினகரன் கைக்கு ஆட்சி வந்தால் அங்கு இருப்பவர்கள் (முதல்வர் ஆதரவாளர்கள்) எல்லாம் ஜூனியர்கள் ஆகிவிடுவார்கள். அப்போது, அவர்கள் நம்மிடம் சிபாரிசு கேட்பார்கள்.  எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இருந்தால், வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து கட்சியின் புதிய உறுப்பினர் சேர்க்கைப் படிவத்தை கொடுக்க முடியுமா.? செருப்பைக் கழட்டி அடிப்பார்கள் மக்கள். அந்த அளவுக்கு வெறுப்பில் இருக்கிறார்கள்.

ஆர்.கே.நகரில் வெற்றிபெற்றதைப் போல மற்ற தொகுதியில் எங்களால் வெற்றிபெற முடியாது என்று முதல்வர் சொல்கிறார். நான் அவர்களுக்கு சவால் விடுகிறேன். எம்.எல்.ஏ-க்கள் நீக்கம் தொடர்பான வழக்கில் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு நான் அரவக்குறிச்சி தொகுதியைக் ராஜினமா செய்கிறேன். அதேபோல், முதல்வரும் துணை முதல்வரும் அவர்கள் பதவியை ராஜினமா செய்யட்டும். .தேர்தலைச் சந்திப்போம் யார் வெற்றி பெறுகிறார்கள் என்று பார்ப்போம் என்று சவால்விட்டவர்,

ஜெயலலிதா அரசாக இருந்தால் பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெறப்பட்டிருக்கும். போக்குவரத்துத் துறை  பொதுமக்களுக்கு சேவையாற்றக்கூடிய துறை. வருமானம் என்ற அடிப்படையில் இந்தத் துறையைப் பார்க்கக்கூடாது. ஏற்படும் நிதிப் பற்றாக்குறையை அரசுதான் வழங்க வேண்டும். சேலத்திலிருந்து கோவைக்கு சுமார் 1,000 பேருந்து வழித்தடங்களை முக்கிய அமைச்சர்கள் சிலர் வாங்கிய பிறகுதான் பேருந்துக் கட்டண உயர்வு நடந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தனியார் பேருந்து நிறுவன உரிமையாளர்களிடம் `பெட்டியும்' வாங்கியிருக்கிறார்கள்' என்று பேசி அதிர வைத்தார்.