Published:Updated:

15 வழக்குகளில் பி.ஆர். பழனிச்சாமிக்கு நிபந்தனை ஜாமீன்!

15 வழக்குகளில் பி.ஆர். பழனிச்சாமிக்கு நிபந்தனை ஜாமீன்!
15 வழக்குகளில் பி.ஆர். பழனிச்சாமிக்கு நிபந்தனை ஜாமீன்!
15 வழக்குகளில் பி.ஆர். பழனிச்சாமிக்கு நிபந்தனை ஜாமீன்!

மதுரை: பி.ஆர்.பி., கிரானைட் நிறுவன பங்குதாரர் பி.ஆர். பழனிச்சாமிக்கு 15 வழக்குகளில் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது.

சட்டவிரோதமாக குவாரி நடத்தியது, வெடிபொருட்கள் பதுக்கியது உள்ளிட்ட 15 வழக்குகளில், கைது செய்யப்பட்ட பி.ஆர்.பி. கிரானைட் நிறுவன பங்குதாரர் பி.ஆர். பழனிச்சாமியின் மனுக்கள் கீழ் நீதிமன்றத்தில் தள்ளுபடியான நிலையில், ஜாமீன் கோரி அவர்  உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

##~~##
இந்நிலையில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று உத்தரவிட்டுள்ளது.

அவர் தினமும் காலை 10.30 மணிக்கு மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும், தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.