Published:Updated:

மார்க்ஸிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக கே.பாலகிருஷ்ணன் தேர்வு..!

கார்த்திக் துரைமகாராஜன்.சி
மார்க்ஸிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக கே.பாலகிருஷ்ணன் தேர்வு..!
மார்க்ஸிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக கே.பாலகிருஷ்ணன் தேர்வு..!

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக கே.பாலகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

மார்க்ஸிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக கே.பாலகிருஷ்ணன் தேர்வு..!

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நான்கு நாள் மாநில மாநாடு தூத்துக்குடியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அக்கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக கே.பாலகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக ஜி.ராமகிருஷ்ணன் மாநிலச் செயலாளராக இருந்தார். தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கே.பாலகிருஷ்ணன், 1974- ல் இந்திய மாணவர் சங்கத்தின் முதல் மாநிலத் தலைவராக இருந்தவர். மார்க்ஸிஸ்ட் கட்சியின் தென்ஆற்காடு மாவட்டச் செயலாளராகவும், கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும் பணியாற்றியவர். பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு, பலமுறை சிறையிலடைக்கப்பட்டுள்ளார். சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.