Published:Updated:

'சாதிமறுப்புத் திருமணம் செய்த பெண்களை ஊரைவிட்டு காலி செய்யச் சொல்லி தீர்மானம்' - தூத்துக்குடி அருகே கொடூரம்!

தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் கிராமத்தில் கடந்த 15 வருடத்தில் வேறு சாதி ஆண்களை திருமணம் செய்த பெண்கள் ஊரைவிட்டு வெளியேற வேண்டும் என்ற ஓர் அதிர்ச்சிகரமான தீர்மானத்தை ஊர்க்கூட்டத்தில் நிறைவேற்றியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது புன்னக்காயல். இக்கிராமத்தில் கிறிஸ்துவ மீனவ சமுதாய மக்கள் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இந்த ஊர்க் கூட்டத்தில், "வேற்று சாதி ஆண்களை திருமணம் செய்த பெண்கள் ஊரைவிட்டு வெளியேற வேண்டும்" என்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி ஊர் முழுவதும் மைக்கில் அறிவிப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

அதில், "ஜார்ஜ் மகள், காட்வின் மகள், டேவிட் மகள், ஜெரோன் மகள், ஆரோக்கியம் மகள், ராபர்ட் மகள்.. என 14 பேரின் பெயரைச் சொல்லி, கடந்த 15 வருடத்தில் வேறு சாதி ஆண்களை மணம் முடித்தவர்கள் ஊரை விட்டு வெளியேற வேண்டும். இவ்வாறு வழிதவறிப் போனவர்களுக்கு நமது ஊரில் இடமும் கிடையாது. நன்மையும் தீமையும் கிடையாது. ஊர்க்கூட்டத்தின் இத்தீர்மானத்தை மீறி ஊருக்குள் அவர்கள் வந்தாலோ, அல்லது அவர்களுக்கு யாராவது ஆதரவு அளித்தாலோ, அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இனி வரும் காலங்களில் நமது ஊர் பெண்களை நல்வழிப்படுத்தவே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அறிவிப்பில் கூறப்பட்டவர்கள் வீட்டைக் காலி செய்யாவிட்டால் ஊர்மக்களே அவர்களது வீட்டுக்குப் பூட்டு போடுவார்கள்" என அறிவிக்கப்பட்டுள்ளது. 

"இதே ஊரைச் சேர்ந்த மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த அரசு வேலை பார்க்கும் ஒரு பெண், சமீபத்தில் ஆழ்வார்திருநகரில் உள்ள ஒரு மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்துள்ளார். அப்பெண்ணை ஊரைவிட்டு வெளியேற ஊர்க்கமிட்டி சொல்ல, அதற்கு மறுத்துள்ளார் அப்பெண். அதனால்தான் கடந்த 15 வருடத்தில் வேறு சாதி ஆணை மணம் முடித்த பெண்ணின் குடும்பங்களை ஊரைவிட்டுக் காலி செய்ய இப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது." என்று ஊர் மக்கள் கூறியுள்ளனர். இதற்கிடையே கிராம கமிட்டியின் இத்தீர்மானத்தை சமூக ஆர்வலர்கள் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.