Election bannerElection banner
Published:Updated:

ஆந்திரா டூ கோவை... மாணவர்களை குறிவைத்து கடத்தப்பட்ட 216 கிலோ கஞ்சா

ஆந்திரா டூ கோவை... மாணவர்களை குறிவைத்து கடத்தப்பட்ட 216 கிலோ கஞ்சா
ஆந்திரா டூ கோவை... மாணவர்களை குறிவைத்து கடத்தப்பட்ட 216 கிலோ கஞ்சா

ஆந்திரா டூ கோவை... மாணவர்களை குறிவைத்து கடத்தப்பட்ட 216 கிலோ கஞ்சா

ஆந்திராவில் இருந்து கோவைக்கு 216 கிலோ கஞ்சா கடத்தியவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கோவை, ஆர்.எஸ்.புரம் காவல்நிலையத்துக்குட்பட்ட சீரநாயக்கன்பாளையம் பகுதியில், போலீஸார் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த குவாலிஸ் கார் ஒன்றை நிறுத்தி, போலீஸார் சோதனை நடத்தினர். வாகனத்தில் இருந்த தர்மர், பாண்டீஸ்வரன், இருளாண்டி, சதீஸ்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இவர்கள் அனைவரும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

விசாரணையில் இவர்கள், ஆந்திர மாநிலம், விசாசப்பட்டினத்தில் இருந்து, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து, கோவைக்கு கஞ்சா கடத்தியது தெரியவந்துள்ளது. இதையடுத்து, காரில் 108 பார்சல்கள் மூலம் கடத்தப்பட்ட 216 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கோவை, இவர்கள்  மலுமிச்சம்பட்டியில் உள்ள குமார் என்பவர் மூலம் கஞ்சா கடத்தியது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, அந்த 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த குவாலிஸ் கார், 216 கிலோ கஞ்சா மற்றும் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. இதனிடையே, கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதும், ஏற்கெனவே கஞ்சா கடத்தல் வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, இந்தக் கடத்தலில் தொடர்புடைய மற்றவர்கள் குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு