Election bannerElection banner
Published:Updated:

மதுரை என்கவுன்டர்! - தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

மதுரை என்கவுன்டர்! - தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
மதுரை என்கவுன்டர்! - தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

மதுரை என்கவுன்டர்! - தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

மதுரையில்,  2 ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மதுரையைச் சேர்ந்தவர், இருளாண்டி. இவர்மீது சென்னை, மதுரை, திண்டுக்கல், திருச்சி பகுதிகளில் பலரை மிரட்டிப் பணம் பறித்ததாக வழக்குகள் இருக்கின்றன. தவிர, 6 கொலை வழக்குகள், கொலை முயற்சி, கட்டப் பஞ்சாயத்து வழக்குகளும் நிலுவையில் இருக்கின்றன. இவருக்கு கூட்டாளியாகச் செயல்பட்டுவந்தவர், சகுனி கார்த்திக். 

இவர்கள் இருவரும் நேற்று மதுரையில் சமூக விரோதச் செயலில் ஈடுபட இருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இருவரும் சிக்கந்தர் சாவடியிலுள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்தனர். இதை அறிந்த போலீஸார், அந்த வீட்டை சுற்றிவளைத்தனர். இருவரையும் சரண் அடையுமாறு போலீஸார் கோரினர். ஆனால், அவர்கள் அதை ஏற்காமல் தாக்க முயன்றனர். இதையடுத்து, போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவரும் உயிரிழந்தனர்.

இந்த என்கவுன்டர், மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மாநில மனித உரிமைகள் ஆணையம், இது தொடர்பாக தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த என்கவுன்டர் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனக் கோரியுள்ளது. மேலும், அது சம்பந்தமான அறிக்கையை டி.எஸ்.பி  8 வாரங்களுக்குள் தாக்கல் செய்யவேண்டுமென்று மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு