Election bannerElection banner
Published:Updated:

அரசு கேபிள் செட்டாப் பாக்ஸுக்கு அடாவடி வசூல்!- போராட்டத்தில் குதித்த இந்திய கம்யூனிஸ்ட்

அரசு கேபிள் செட்டாப் பாக்ஸ் பொருத்த, அரசு நிர்ணயித்த தொகையைவிட பல மடங்கு அதிகமாக வசூலிக்கும் சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விமலா கேபிள் உரிமையாளர் முரளியைக் கண்டித்து, சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு எதிரே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிச்சிப்பாளையம் கிளை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டார்கள்.

இதுபற்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் இராஜேந்திரன், ''அரசு கேபிள் செட்டாப் பாக்ஸ் பொருத்துவதற்காக ஒரு கனெக்‌ஷனுக்கு 200 ரூபாய் வசூலிக்க அரசு உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் கேபிள் கனெக்‌ஷன் நடத்தி வரும் விமலா கேபிள் உரிமையாளர் முரளி, ஒரு கனெக்‌ஷனுக்கு 500 ரூபாய் வசூலிக்கிறார்.

கிச்சிப்பாளையத்திலுள்ள அதியமான் தெரு, முகமது புரா, நாராயண நகர் எனப் பல பகுதிகளில், 700-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு கேபிள் கனெக்‌ஷன் கொடுத்திருக்கிறார். தற்போது, அனைத்து வீடுகளிலும் செட்டாப் பாக்ஸ் பொருத்துவதற்கு 500 ரூபாய் கொடுத்தால்தான் பொருத்த முடியும் என்றும் கூறுகிறார். பகல் கொள்ள அடிக்கும் முரளி மீது அரசு கேபிள் டி.வி., துணை மேலாளரிடம் தொலைபேசி மூலமாகவும், நேரில் சென்று புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம்'' என்றார்.

இதுபற்றி கேட்க, கிச்சிப்பாளையம் கேபிள் டி.வி., ஆபரேட்டர் முரளியைத் தொடர்பு கொண்டோம். ஆனால் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. அவர் தரப்பு விளக்கத்தைக் கொடுத்தால், பதிவுசெய்யத் தயாராக உள்ளோம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு