Election bannerElection banner
Published:Updated:

மனிதக் கழிவுகளை அள்ளும் பணி ஆய்வு! ஆட்சியர் கூட்டத்தில் அதிரடி உத்தரவு!

மனிதக் கழிவுகளை அள்ளும் பணி ஆய்வு! ஆட்சியர் கூட்டத்தில் அதிரடி உத்தரவு!
மனிதக் கழிவுகளை அள்ளும் பணி ஆய்வு! ஆட்சியர் கூட்டத்தில் அதிரடி உத்தரவு!

மனிதக் கழிவுகளை அள்ளும் பணி ஆய்வு! ஆட்சியர் கூட்டத்தில் அதிரடி உத்தரவு!

மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதால் ஏற்படும் உயிரிழப்புகள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன. இதனைத் தடுக்க மேற்கொள்ப்பட்ட ஆய்வில் ஜெகதீஷ் இர்மானி அதிகாரிகளை கடுமையாக எச்சரித்தார்.

கோப்புப்படம்

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் கடந்த பிப்ரவரி 13-ம் தேதி நட்சத்திர ஹோட்டலில் கழிவுகளை துப்புரவு செய்தபோது விஷ வாயு தாக்கி மூவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இந்நிலையில் நேற்றைக்கு முந்தைய நாள் மாலை சம்பவம் நடத்த தனியார் உணவகத்தில் தேசிய துப்புரவு பணியாளர் மற்றும்  மறுவாழ்வு குழு உறுப்பினர் ஜெகதீஷ் இர்மானி கழிவு தொட்டி பகுதியினை ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது முறையாக அனுமதி பெறமால் கழிவுநீர் தொட்டி அமைத்த நிர்வாகத்தின் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க வருவாய் கோட்டாட்சியருக்கு உத்தரவிட்டார். பின்பு காஞ்சிபுரம் சென்ற தேசிய துப்புரவு பணியாளர் மற்றும்  மறுவாழ்வு குழு உறுப்பினர் ஜெகதீஷ் இர்மானி காஞ்சிபுரம் பெருநகராட்சிக்குபட்ட மூங்கில் மண்டபம், பேருந்து நிலையம், டி.கே.நம்பித்தெரு, காமாட்சியம்மன் ஆலயம் உள்ளிட்ட  பகுதிகளில் துப்புரவு பணியாளர்களிடம் குறைகளையும் துப்புரவு பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பணியாளர்கள் பலர் போதிய பாதுகாப்பு உபகரணங்களின்றி பணி செய்வதை கண்ட உறுப்பினர் ஜெகதீஷ் இர்மானி பெருநகராட்சி ஆணையர் சர்தார் மற்றும் நகர் நல அலுவலர் முத்து ஆகியோரை கடுமையாக எச்சரித்தார். மேலும் பல இடங்களில் சுகாதாரமின்றி கிடப்பதாக கடும் குற்ற் சாட்டினார் . கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் பெருநகராட்சி மெத்தனமாக செயல்படுகிறது என பாதியிலேயே ஆய்வை முடித்துகொண்டு கிளம்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்ட ஜெகதீஷ் இர்மானி “மனிதக்க ழிவுகளை மனிதர்களை கொண்டு அள்ளும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் இதில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். மார்ச் 30க்குள் மனிதக் கழிவுகளை அள்ளும் நபர்களை சந்தித்து இனி இந்த வேலைகளை செய்யக் கூடாது. நவீன இயந்திரங்கள் கொண்டே இதை கழிவுகளை அகற்ற நகராட்சி, பேரூராட்சிகளுக்கு உத்தரவிட வேண்டும்.” என்றார்.  

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு