Published:Updated:

அரசு வாகனங்களை உயரதிகாரிகளின் குடும்பத்தினர் பயன்படுத்துகின்றனரா? காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

காவல்துறை வாகனங்களை, உயரதிகாரிகளின் குடும்பத்தினர் பயன்படுத்துகின்றனரா? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

அரசு வாகனங்களை உயரதிகாரிகளின் குடும்பத்தினர் பயன்படுத்துகின்றனரா? காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

காவல்துறை உயரதிகாரிகளுக்கு பணி செய்வதற்கு காவலர்கள் பயன்படுத்தப்படும் முறை ஆர்டர்லி என்று குறிப்பிடப்படுகிறது. ஆர்டர்லி முறையில் பணியாற்றும் காவலர்கள் எண்ணிக்கை தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான வழக்கு இன்று நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர், 'ஆர்டர்லி முறையில் பணியாற்றும் காவலர்கள் குறித்து உதவி ஐ.ஜி தாக்கல் செய்த அறிக்கையில் திருப்தியில்லை.

ஆர்டர்லி பற்றிய தகவல்களை முழுமையாகத் தராமல் காலி இடங்களை மட்டுமே தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் 10-15 சதவிகிதம் காவலர்கள் ஆர்டர்லி முறையில் பணியாற்றிவருகின்றனர். காவல்துறை வாகனங்களை உயரதிகாரிகளின் குடும்பத்தினர், அவர்களது சொந்தத் தேவைகளுக்குப் பயன்படுத்துகின்றனரா? காவல்துறை உயரதிகாரிகள் தங்களது குடும்பங்களுக்கு எத்தனை அரசு வாகனங்களை பயன்படுத்துகின்றனர்?' என்று கேள்வி எழுப்பினார். மேலும், ஆர்டர்லி முறை குறித்து 4 வார காலத்துக்குள் முழுமையான விவரங்களுடன் புதிய அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசு தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.