Published:Updated:

`கண்ணெதிரே தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி!’ - கண்டுகொள்ளாத சேலம் கலெக்டர்

`கண்ணெதிரே தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி!’ - கண்டுகொள்ளாத சேலம் கலெக்டர்

`கண்ணெதிரே தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி!’ - கண்டுகொள்ளாத சேலம் கலெக்டர்

`கண்ணெதிரே தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி!’ - கண்டுகொள்ளாத சேலம் கலெக்டர்

`கண்ணெதிரே தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி!’ - கண்டுகொள்ளாத சேலம் கலெக்டர்

Published:Updated:
`கண்ணெதிரே தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி!’ - கண்டுகொள்ளாத சேலம் கலெக்டர்

சேலம் கலெக்டர் அலுவலகத்தில், தன் கண்ணெதிரே மாற்றுத்திறனாளி ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தைக் கண்டும்காணாமல்   கலெக்டர் ரோஹிணி கடந்துசென்றது, சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 

முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தில் கலெக்டராக இருப்பவர், ரோஹிணி ராம்தாஸ் பாஜிபாக்கரே. இவர், மிகவும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு, பொதுமக்களின் குறைகளைக் கேட்டு நடவடிக்கை எடுத்துவருகிறார் எனப் பலரும் பாராட்டிவருவதால், தமிழக அரசு சிறந்த ஆட்சியர் என்ற பட்டத்தையும் சமீபத்தில் வழங்கியது.

ஆனால் நேற்று (மார்ச் 26), சேலத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்புக் கூட்டத்தில், கலெக்டர் அலுவலகத்தின் போர்ட்டிகோவில்,மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களைப் பெற்றுவந்தபோது, கலெக்டர் இருந்த இடத்திலிருந்து 10 மீட்டர் அருகில், மாற்றுத்திறனாளி ஒருவர் உடலில் மண்ணெண்ணைய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அவரின் குழந்தைகள் பரிதாபமாக அங்கு நின்று கொண்டிருந்தார்கள். உடனே காவல்துறையினர் ஓடிவந்து தடுத்து நிறுத்தினார்கள். ஆனால், கலெக்டர் ரோஹினி, இந்தச் சம்பவத்தைக் கண்டும்காணாமல் சென்றது, சம்பவ இடத்தில் இருந்தவர்களுக்கு கலெக்டர்மீது அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளியிடம் பேசினோம். ''என் பேரு சீனிவாசன், என் மனைவி பேரு ரங்கநாயகி. எங்களுக்கு ஏழாம் வகுப்பு படிக்கும் தீபிகா என்ற மகளும், ஐந்தாம் வகுப்பு படிக்கும் இளைய பெருமாள் என்ற மகனும் இருக்கிறார்கள். நாங்க வேம்படிதாளம் அருகே நடுவனேரியில் குடியிருக்கிறோம். பிறவிக் குறைபாட்டால், குச்சி உதவியுடன்தான் என்னால் நடக்க முடியும். மகுடஞ்சாவடி பகுதியில் ஹோட்டல் கடை நடத்திவருகிறேன். கடந்த 2015-ம் ஆண்டு, கனரா வங்கியோடு கைகோத்திருக்கும் கேன்ஃபேன் வங்கியில், ஹோம் லோன் ரூ.10 லட்சம் வாங்கினேன். எனக்கு லோன் கொடுத்த கேன்ஃபேன் ஊழியர்கள், ஒரு லட்சத்தை எடுத்துக்கொண்டு, 9 லட்சம் கொடுத்தாங்க. நானும் வாங்கிய கடனுக்கு மாதம் தோறும் ரூ.10,100 தவணையாகக் கட்டிவந்தேன். இந்த நிலையில், கடந்த 2017 ஜூன் மாதம் எனக்கு விபத்து ஏற்பட்டதால், ஹோட்டலை சரிவர நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையிலும் மாதம் தோறும் வட்டி ரூ.7,500 கட்டிவருகிறேன். வங்கி மேலாளரைச் சந்தித்து நிலவரத்தைச் சொல்லி, ஓரிரு மாதத்திற்குப் பிறகு கடனை சரியாகக் கட்டுவதாகத் தெரிவித்தேன். ஆனால்,அந்த வங்கியின் மேலாலர் அருண்குமார் அடியாட்களை வைத்து மிரட்டுவதோடு, என் வீட்டுக்கு வந்து பூட்டுபோட்டுவிட்டு போய்விட்டார். இதனால் ஏற்பட்ட சிரமத்தால், குழந்தைகளுடன் தற்கொலைசெய்துகொள்ளலாம் என கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தீக்குளிக்க முயன்றேன்'' என்றார்.