Published:Updated:

திருநங்கைகளுக்கான குறைதீர்ப்புக் கூட்டம்: தேனி கலெக்டர் உறுதி

திருநங்கைகளுக்கான குறைதீர்ப்புக் கூட்டம் நடத்துவதாக தேனி மாவட்ட ஆட்சியர் தங்களிடம் உறுதி அளித்துள்ளதாக திருநங்கைகள் தெரிவித்தனர். 

தேனி மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கைகள் 5 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் கலெக்டர் பல்லவி பல்தேவ். இன்றைய சமூக கட்டமைப்பில் திருநங்கைகள் சமூகத்தினர் பல்வேறு இடங்களில் புறக்கணிப்புகளை சந்தித்துவருகின்றனர். இந்நிலையில், அவர்கள் சுயதொழில் மூலமாக தங்களை நிலைநிறுத்திக் கொள்ள அரசு பல்வேறு வகைகளில் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அந்தவகையில் 5 திருநங்கைகளுக்கு தலா 20ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் நேற்று (மார்ச் 26) வழங்கப்பட்டன.

இதுகுறித்து திருநங்கை பாரதியிடம் பேசியபோது, ``சுயதொழில் தொடங்குவதற்காக எங்களுக்கு பணம் கிடைத்திருக்கிறது. இதைவைத்து சமையல் பாத்திரங்கள் வாங்கி அதனை வாடகைக்கு விடலாம் என்றும், எங்களில் சிலர் நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சிகளுக்குச் செல்கின்றனர். அவர்களுக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்கும் திட்டமிட்டிருக்கிறோம். தேனி மாவட்டத்தில் மொத்தம் 350 திருநங்கைகள் உள்ளனர். அனைவருக்கும் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும். அவர்கள் பல்வேறு பிரச்னைகளில் இருக்கிறார்கள். அதனை சரிசெய்ய வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை வைத்தோம். உடனே நடவடிக்கை எடுப்பதாக எங்களிடம் உறுதியளித்தார். இனி திருநங்கைகளுக்கான குறைதீர்ப்புக் கூட்டத்தை தான் நடத்துவதாகவும் கூறினார். இந்த குறைதீர்ப்புக் கூட்டத்தின் மூலம் எங்களது பிரச்னைகள், தேவைகள் பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு நேரடியாக எங்களால் தெரிவிக்க முடியும். மகிழ்ச்சியாக உள்ளது.`` என்றார்.