Published:Updated:

பேச்சுவார்த்தை: இந்தியாவுக்கு பாகிஸ்தான் அழைப்பு!

பேச்சுவார்த்தை: இந்தியாவுக்கு பாகிஸ்தான் அழைப்பு!
பேச்சுவார்த்தை: இந்தியாவுக்கு பாகிஸ்தான் அழைப்பு!
பேச்சுவார்த்தை: இந்தியாவுக்கு பாகிஸ்தான் அழைப்பு!

புதுடெல்லி: எல்லைப் பகுதியில் நிலவும் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டு வர.  அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு, இந்தியாவுக்கு பாகிஸ்தான் அரசு அழைப்பு  விடுத்துள்ளது.

இது தொடர்பாக, வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என  பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரபானி கர் அழைப்பு விடுத்துள்ளார்.

எல்லைப் பிரச்னை தொடர்பாக, இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மற்றும் அரசியல் 

##~~##
தலைவர்கள் கருத்து தெரிவிப்பது, இரு நாடுகளுக்கு இடையே பதற்றத்தை அதிகரிக்கவே  வழி வகுக்கும் என்றும், எனவே, பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்னைக்கு தீர்வு காண  முடியும் என்றும் ஹினா ரபானி கூறியுள்ளார்.
முன்னதாக இந்திய ராணுவத்தின் கடுமையான நிலைப்பாடு மற்றும் தூதரக ரீதியில்  ஏற்பட்ட கடும் நெருக்கடி காரணமாக எல்லைப்பகுதியில் பதற்றத்தை தணிக்கும் விதமாக  போர் நிறுத்த ஒப்பந்தத்தை கடைபிடிக்க ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் ராணுவத்  தலைமை,எல்லைப் பகுதியில் சுயக்கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ளுமாறு தனது  வீரர்களை அறிவுறுத்தி உள்ளது.