Published:Updated:

டீசல் விலை: மத்திய அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்!

புதுடெல்லி: டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

டெல்லியில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பெட்ரோலைப்போன்று, டீசலுக்கும் அதன் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ளலாம் என ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதனால் டீசல் விலையும், பெட்ரோலைப்போன்றே அவ்வப்போது உயர்த்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

##~~##
இந்நிலையில் மத்திய அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
டெல்லியில் இதுபற்றி கருத்து தெரிவித்த பா.ஜனதா செய்தித் தொடர்பாளர் பிரகாஷ்  ஜாவேத்கர், இந்த முடிவின் மூலம் தன்னுடைய பொறுப்பில் இருந்து தப்பித்துக்கொள்ள  ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.
டீசல் விலை உயர்ந்தால் வேளாண்மை, போக்குவரத்து உள்ளிட்ட துறைகள் பெரிதும்  பாதிப்புக்கு உள்ளாக்கும் என்றும், சாதாரண மக்களுக்கு பெரும் சுமையாக இருக்கும்  என்றும் தெரிவித்தார். மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை ஆறில் இருந்து  ஒன்பதாக உயர்த்தும் மத்திய அரசின் முடிவு ஒரு நாடகம் என்றும் அவர் மேலும்  கூறினார்.