Published:Updated:

டீசல் விலை லிட்டருக்கு 45 காசுகள் உயர்வு!

டீசல் விலை லிட்டருக்கு 45 காசுகள் உயர்வு!
டீசல் விலை லிட்டருக்கு 45 காசுகள் உயர்வு!
டீசல் விலை லிட்டருக்கு 45 காசுகள் உயர்வு!

புதுடெல்லி: டீசல் விலை, நேற்று நள்ளிரவு முதல் லிட்டர் ஒன்றிற்கு 45 காசுகள் உயர்ந்துள்ள நிலையில், மாதம் 50 காசுகள் வரை உயர்த்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலையை சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப நிர்ணயம் செய்துகொள்ளலாம் என எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஏற்கெனவே அனுமதி அளித்திருக்கிறது.

இந்நிலையில் டீசல் விலையையும் அதுபோன்று எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயம் செய்துகொள்ளலாம் என்று மத்திய அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியது.

##~~##
எண்ணெய் நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யும் வகையில் ஒட்டுமொத்தமாக விலையை உயர்த்தாமல் மாதந்தோறும் 50 காசுகள் உயர்த்தலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 
இந்நிலையில் மத்திய அரசின் இந்த அனுமதியை தொடர்ந்து, டீசல் விலையை லிட்டர் ஒன்றிற்கு 45 காசுகள் உயர்த்துவதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.