Published:Updated:

எம்.பி.பி.எஸ்.- பி.டி.எஸ். படிப்பு: தமிழ்நாடு மருத்துவ பல்கலை எச்சரிக்கை!

சென்னை: தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகத்தால்  அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ (எம்.பி.பி.எஸ்.) மற்றும் பல் மருத்துவ (பி.டி.எஸ்.) படிப்பு  குறித்த அறிவிப்பை அப்பல்கலைக் கழகம் இன்று வெளியிட்டுள்ளது.

மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் மட்டுமே படிக்க வேண்டும்  என்றும், இல்லையென்றால் அதற்கு தாங்கள் பொறுப்பு அல்ல என்றும் அப்பல்கலைக்  கழகம் அறிவித்துள்ளது.

##~~##
மேலும் மருத்துவ கல்வியில் குறிப்பிட்ட கல்லூரியில் சேர்வதற்கு முன்னர்,  பெற்றோர்களும், மாணவர்களும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்  கழகத்தின் இணணய தளத்தை பார்த்து, அக்கல்லூரி பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தை  பெற்றுள்ளதா என்பதை பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி  உள்ளது.