Published:Updated:

லஞ்ச வழக்கில் சிக்கிய பல்மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் குணசீலன் பதவி நீக்கம்!

சென்னை: பல் மருத்துவ பட்டமேற்படிப்பு தொடங்க லஞ்சம் பெற்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்ட டாக்டர் குணசீலன், தமிழ்நாடு பல்மருத்துவ கவுன்சில் தலைவர் உள்பட அனைத்து அரசு பொறுப்புகளிலும் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரியில் பட்டமேற்படிப்பு தொடங்க ரூ. 25 லட்சம் பெறப்பட்ட வழக்கில் டாக்டர் ஆர். குணசீலன் மற்றும் டாக்டர் எஸ். முருகேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் வகித்து வந்த அரசுப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் சார்பில் இந்திய பல் மருத்துவ கவுன்சிலின் உறுப்பினராக குணசீலன் நியமிக்கப்பட்டிருந்தார்.அந்தப் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.

##~~##
மேலும், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தமிழக அரசு கட்டத் தீர்மானித்துள்ள பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை திட்டத்தின் நிர்வாக உயர்நிலைக் குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டிருந்த அவர், அந்தப் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவுகளை சுகாதாரத் துறை செயலாளர் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்
இந்த லஞ்ச வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் சிலரை சிபிஐ அதிகாரிகள் தேடிவருவது குறிப்பிடத்தக்கது.