Published:Updated:

இந்தியாவுடனான நட்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள்:பாக்.கிற்கு பிரணாப் எச்சரிக்கை!

இந்தியாவுடனான நட்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள்:பாக்.கிற்கு பிரணாப் எச்சரிக்கை!
இந்தியாவுடனான நட்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள்:பாக்.கிற்கு பிரணாப் எச்சரிக்கை!
இந்தியாவுடனான நட்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள்:பாக்.கிற்கு பிரணாப் எச்சரிக்கை!

புதுடெல்லி: இந்தியாவுடனான நட்பை வீணாகக் கெடுத்துக் கொள்ளும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டின் 64 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு,ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நேற்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். 

பிரணாப் முகர்ஜியின் உரை சுருக்கம்:

"சில நாடுகள் பயங்கரவாதத்தின் மையமாகவும், அங்குள்ள சிலர் பயங்கரவாதிகளுக்கு நிதியளித்து உதவி வருவதும் பெரும் கவலையளிக்கும் விஷயமாகவுள்ளது. இந்தியா எப்போதுமே அமைதியைத்தான் விரும்புகிறது. இந்தியா நம்பிக்கையுடன் நேசக் கரத்தை நீட்டி வருகிறது.ஆனால் இதனை பாகிஸ்தான் தனக்கு எளிதாக எடுத்துக் கொண்டு உதாசீனப்படுத்தக் கூடாது.

##~~##
எம்.பி., எம்.எல்.ஏ., உள்ளிட்ட அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.லஞ்சம், ஊழல், முறைகேடுகள் என்பவை வாழ்வியல் அறநெறிகளை பின்தள்ளும் நிலை ஏற்பட்டு விடுமா என்ற கேள்வி எழுகிறது.
டெல்லியில் மாணவி ஒருவர் கொடூரமாக பலத்காரம் செய்யப்பட்டு இறந்தது, நவீன இந்தியாவின் மிகப்பெரிய சோகமாக அமைந்துவிட்டது.பெண்களின் கண்ணியத்தைக் காப்பதே இந்தியாவின் நாகரீகமாக அறியப்படுகிறது.எப்போது ஒரு பெண்ணுக்கு எதிராக கொடுமை நிகழ்த்தப்பட்டதோ அப்போதே நமது தேசத்தின் ஆன்மா காயப்பட்டுவிட்டது. நமது நீதிநெறிகளை மீண்டும் நிலை நிறுத்த வேண்டிய நேரமிது.
மனிதப் பண்புகளையே வெறுக்கவைக்கும் செயல்களை அனுமதிக்கக் கூடாது. இதுபோன்ற நிகழ்வுகள் நன்னெறி என்பதைக் குருடாக்குகிறது. நாம் எந்த இடத்தில் தவறு செய்கிறோம் என்பதை நமது மனசாட்சியை ஆராந்து அறிய வேண்டும்.
இளைஞர்கள் காலி வயிற்றுடன் கனவு காண முடியாது. அவர்கள் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்காகவும், அடுத்து தேசத்தின் வளர்ச்சியில் பங்காற்றவும் வேலைவாய்ப்பு பெற வேண்டும். பொருளாதார வளர்ச்சின் பயன்கள் ஒரு சாராருக்கு மட்டுமே கிடைக்கும் நிலை இருக்கக் கூடாது. தேசத்தின் முன்னேற்றம் என்ற மரத்தில் உருவாகும் ஒவ்வொரு கனிகளும் நாட்டில் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்" என்றார்.