Published:Updated:

விஸ்வரூபம்: தடை நீக்கத்தை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு!

விஸ்வரூபம்:  தடை நீக்கத்தை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு!
விஸ்வரூபம்: தடை நீக்கத்தை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு!
விஸ்வரூபம்:  தடை நீக்கத்தை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு!

சென்னை:  விஸ்வரூபம் தடை நீக்கத்திற்கு எதிரான தமிழக அரசு தாக்கல் செய்துள்ள  மேல்முறையீடு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் விசாரணைக்கு  வருகிறது.
 
விஸ்வரூபம் படத்துக்கான தமிழக அரசின் தடையை நீக்கி, நேற்று இரவு 10 மணிக்கு  உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன் உத்தரவு பிறப்பித்தார்.
 
இந்தத் தீர்ப்பை எதிர்த்து தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வில் இன்று காலை  மேல் முறையீடு செய்ய உள்ளதாகவும், அதுவரை தீர்ப்பை நிறுத்தி வைக்குமாறும் தமிழக  அரசின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், நீதிபதி கே.வெங்கட்ராமன் இந்தக்  கோரிக்கையை நிராகரித்தார்.
 

##~~##
இதைத் தொடர்ந்து, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசின்  அட்வகேட் ஜெனரல் ஏ.நவநீதகிருஷ்ணன் தலைமையிலான வழக்கறிஞர்கள், நீதிபதி  எலிபி தர்மாராவின் வீட்டிற்கு நேற்று இரவு 11 மணிக்கு சென்று முறையிட்டனர்.
 
அவர்களிடம் பேசிய நீதிபதி, இன்று காலை 10.30 மணிக்கு முதல் அமர்வில் இது  தொடர்பாக முறையிடுமாறும், இந்த வழக்கை முதல் வழக்காக விசாரிப்பதாகவும்  கூறினார்.
இதை அடுத்து, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பில் உள்ள எலிபி  தர்மாராவ் தலைமையிலான முதல் அமர்வில் முன்னிலையில் "விஸ்வரூபம்'  திரைப்படம் தொடர்பான மேல்முறையீடு இன்று மதியம் விசாரணைக்கு வர உள்ளது.