Published:Updated:

தமிழகத்திற்குள் நுழைய முயன்ற வாட்டாள் நாகராஜ் கைது!

Vikatan Correspondent
தமிழகத்திற்குள் நுழைய முயன்ற வாட்டாள் நாகராஜ் கைது!
தமிழகத்திற்குள் நுழைய முயன்ற வாட்டாள் நாகராஜ் கைது!
தமிழகத்திற்குள் நுழைய முயன்ற வாட்டாள் நாகராஜ் கைது!

ஈரோடு: தடையை மீறி தாளவாடியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக, தமிழகத்திற்குள்  நுழைய முயன்ற கன்னட சலுவாளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ்  கைது செய்யப்பட்டார்.

பாரதிபுரம் எல்லைக்கடை அருகே அவரையும்,அவரது ஆதரவாளர்களையும் கர்நாடக  போலீசார் இன்று மதியம் கைது செய்தனர்.

முன்னதாக தமிழக அரசு சமீபத்தில் தமிழகத்திலுள்ள அனைத்து அரசு ஆரம்பப்  பள்ளிகளிலும்  தமிழை கட்டாயப் பாடமாக்கியது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,  எல்லையோர  பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அவரவர் தாய்மொழியிலேயே படிக்க   அனுமதிக்குமாறும் கேட்டு சமீபத்தில் கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில்   கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் ஆகியவற்றை நடத்தினார் வாட்டாள் நாகராஜ்.

##~~##
இந்நிலையில், அவர் இன்று ஈரோடு மாவட்டம் தாளவாடியில் இதே கோரிக்கையை   வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தார்.
ஆனால், கோபிச்செட்டிப்பாளையம் ஆர்.டி.ஓ. பழனிச்சாமி, வாட்டாள் நாகராஜ்,    தமிழகத்துக்குள் நுழைய தடை விதித்து உத்தரவிட்டார். சட்டம்-ஒழுங்கு பிரச்சனை   ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் கூறி,அவர் இந்த தடை உத்தரவை பிறப்பித்திருந்தார்.
நாகராஜ் மட்டுமன்றி கர்நாடகாவைச் சார்ந்த யாரும் இன்று முதல் பிப்ரவரி மாத இறுதி   வரை ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தும் நோக்கோடு தமிழகத்தில் நுழையவும் தடை   விதிக்கப்பட்டது.
இருப்பினும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக வாட்டாள் நாகராஜ்   அறிவித்ததால்,  தாளவாடி பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. ஏராளமான  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.