Published:Updated:

மணல் கொள்ளையைப் பற்றி விசாரணை நடத்த வேண்டும்.! ஆட்சியரிடம் மனு

எம்.கணேஷ்

’இப்போது மணல் அள்ள தடை… இதற்கு முன் மணல் அள்ளியவர்களை என்ன செய்வது?’ – கேள்வி கேட்கும் சமூக ஆர்

மணல் கொள்ளையைப் பற்றி விசாரணை நடத்த வேண்டும்.! ஆட்சியரிடம் மனு
மணல் கொள்ளையைப் பற்றி விசாரணை நடத்த வேண்டும்.! ஆட்சியரிடம் மனு

தமிழகம் முழுவதும் மணல் கொள்ளை தலைவிரித்தாடும் இந்தச் சூழலில், தேனி மாவட்டத்தில் பழைய மணல் பாஸ்களை புதுப்பிக்க வேண்டாம் எனவும், சட்டவிரோதமாக மணல் அள்ளுபவர்களை உடனே கைதுசெய்ய வேண்டும் எனவும் கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டுள்ளார். புதிய கலெக்டரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து பாராட்டுகள் வந்தாலும், இதற்கு முன் மணல் அள்ளியவர்களை என்ன செய்யப் போகிறீர்கள் என சமூக ஆர்வலர் ஜெயராஜ் கேள்வி எழுப்புகிறார்.

இதுதொடர்பாக மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கவந்தவரிடம் பேசினோம். ‘போலி பாஸ்கள் மூலம் தேனி மாவட்டத்தைச் சுரண்டி சுடுகாடாக மாற்றிய பெருமை கனிமவளத்துறை அதிகாரிகளைச் சாரும். மணல் கடத்தல் கும்பலுக்கு பங்குதாரர்களே இவர்கள்தான். நிலச்சீர்திருத்தம் என்ற பெயரில் பாஸ்களை வாங்கிக்கொண்டு அப்பகுதியில் இருக்கும் ஆறு, ஓடைகளில் மணல் அள்ளுவது தொடர்கதையாக இருந்தது. ஒரு லோடு என்று கணக்கு காட்டி பல லோடு மணல் மாவட்டத்தை விட்டு கடத்தப்பட்டது. கனிமவளத்துறையின் ஒற்றை பாஸை வைத்துக்கொண்டுள்ளதால், காவல்துறையும், வருவாய்த்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் திணறினர். இந்நிலையில், மணல் கடத்தலைக் கட்டுப்படுத்தும் புதிய கலெக்டரின் நடவடிக்கை பாராட்டுதலுக்குறியது. அதே நேரம், கடந்த பல ஆண்டுகளாக சட்ட விரோதமாக மணல் கடத்திய கும்பல் பற்றியும், மாவட்டத்தில் எங்கெல்லாம் மணல் கொள்ளை போயுள்ளது என்பது பற்றியும் வருவாய்த் துறை உயர் அதிகாரிகள் தலைமையில் ஒரு குழு அமைத்து நேரடியாக விசாரணை செய்ய வேண்டும். மணல் அள்ளப்பட்ட நில உரிமையாளர்களை பிடித்தாலே உண்மை வெளியேவந்துவிடும். இதை கலெக்டர் உடனே கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.