Published:Updated:

கொள்ளையில் ஈடுபட்ட சினிமா உதவி இயக்குநர் உட்பட 6 பேர் கைது!

கொள்ளையில் ஈடுபட்ட சினிமா உதவி இயக்குநர் உட்பட 6 பேர் கைது!
கொள்ளையில் ஈடுபட்ட சினிமா உதவி இயக்குநர் உட்பட 6 பேர் கைது!

கொள்ளையில் ஈடுபட்ட சினிமா உதவி இயக்குநர் உட்பட 6 பேர் கைது!

  சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வைரவனின் மனைவி கண்ணாத்தாள். இவர், தன் கணவரின்  இறப்புக்குப் பின், சென்னையில் உள்ள மகள் வீட்டில் கடந்த டிசம்பர் மாதம் முதல் வசித்துவந்தார். ஏப்ரல் 18-ம் தேதி, கீழப்பூங்குடியில் உள்ள கண்ணாத்தாள் வீட்டுக் கதவு உடைக்கப்பட்டிருப்பது தெரிந்து, பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் அவருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, கண்ணாத்தாள் சென்னையிலிருந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது, மர பீரோவும் இரும்பு பீரோல் உடைக்கப்பட்டு, தங்கம் மற்றும் வெள்ளிப் பொருள்கள் கொள்ளைபோனது தெரிந்து அதிர்ச்சியடைந்தார். உடனே, மதகுபட்டி காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, கொள்ளையர்கள் தேடப்பட்டு வந்தனர். இந்தக் கொள்ளையில் ஈடுபட்ட கீழப்பூங்குடியைச் சேர்ந்த சினிமா உதவி இயக்குநர் விஸ்வநாதன் மற்றும் தமிழ்செல்வன், சார்லஸ், முத்து செல்வன் உட்பட 4 பேர்  கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 25 பவுன் தங்கம், 10 கிலோ வெள்ளிப் பொருள்கள் மீட்கப்பட்டன. மேலும் இருவரை போலீஸார் தேடிவருகின்றனர்.

ஏற்கெனவே இந்த வழக்கில் காளையார்கோவில் பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன், தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த பெர்க்மென்ஸ் ஆகிய 2 பேர் இதற்கு முன் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இன்னும் இரண்டு பேரை போலீஸார் தேடிவருகின்றனர். இவர்கள் பிடிபட்டதும், இன்னும் வைர நகைகள், தங்க நகைகள் கைப்பற்றப்படலாம் என்கிறது போலீஸ் வட்டாரம்.

அடுத்த கட்டுரைக்கு