Published:Updated:

பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் தூக்கு கயிறு அறுத்து எறியப்படும்: வைகோ

பேரறிவாளன் உள்ளிட்ட  3 பேரின் தூக்கு கயிறு அறுத்து எறியப்படும்: வைகோ
பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் தூக்கு கயிறு அறுத்து எறியப்படும்: வைகோ
பேரறிவாளன் உள்ளிட்ட  3 பேரின் தூக்கு கயிறு அறுத்து எறியப்படும்: வைகோ

திருச்சி:  ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின்  தூக்கு கயிறு அறுத்து எறியப்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ  தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக அவர் திருச்சியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,"மரணத் தண்டனை என்பது கூடாது என்று நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து  வருகிறோம். அந்த வகையில் அப்சல் குருவை தூக்கிலிட்டதை நாங்கள் கண்டிக்கிறோம். 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற வழக்கு டெல்லி உச்சநீதிமன்றத்தில் நடை பெற்று வருகிறது.
 

##~~##
இந்த வழக்கின் தீர்ப்பு இன்னும் ஒன்றரை மாதத்தில் வரும் என எதிர்பார்க்கிறோம். இதில்  நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம். 3 பேரின் தூக்கு கயிறு அறுத்து எறியப்படும்" என்றார்.
இதனிடையே திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய வைகோ," இந்தியாவுக்கு வருகை தந்த ராஜபக்சேவை எதிர்த்து மதிமுக போராட்டம் நடத்தி  உலகத்தின் பார்வையை தமிழகத்திற்கு திரும்ப செய்துள்ளோம். தமிழக மக்களாகிய  நீங்கள் எங்களை வாழ்த்துங்கள். நாங்கள் நடத்தும் கிளர்ச்சி போராட்டத்தை வெற்றி பெற  செய்யுங்கள். ஈழத்தமிழர்களுக்கான பிரச்னையில் எங்களது நிலைப்பாட்டை நாங்கள்  எப்போதும் மாற்ற மாட்டோம்" என்றார்.