Published:Updated:

`30 சதவிகித மானியத்துடன் சோலார் மின்சாரத்தை உற்பத்திசெய்யலாம்' - ஆட்சியர் தகவல்!

`30 சதவிகித மானியத்துடன் சோலார் மின்சாரத்தை உற்பத்திசெய்யலாம்' - ஆட்சியர் தகவல்!
News
`30 சதவிகித மானியத்துடன் சோலார் மின்சாரத்தை உற்பத்திசெய்யலாம்' - ஆட்சியர் தகவல்!

`30 சதவிகித மானியத்துடன் சோலார் மின்சாரத்தை உற்பத்திசெய்யலாம்' - ஆட்சியர் தகவல்!

`சூரிய ஒளி மின்சாரத் திட்டத்துக்கு மத்திய அரசு 30 சதவிகித மானியம் வழங்குகிறது. இதைப் பொதுமக்கள் பெற்றுப் பயன்படுத்தலாம்' என கரூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கரூர் ஆட்சியர் அலுவலகத்தில், அரசின் மானியத்துடன்கூடிய சூரிய ஒளி மின்சார உற்பத்தி தொடர்பான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் பேசுகையில்,  ``சூரிய ஒளி மின்சாரத் திட்டத்தின் கீழ் மானியம் பெறத் தகுதியுடையவர்கள்  தனிநபர் குடியிருப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகள், கான்கிரீட் கட்டடங்களில் இயங்கும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், அறக்கட்டளைகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் தனியார் விடுதிகள் ஆகியவற்றில், சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்திசெய்து பயன்படுத்த மத்திய அரசு 30 சதவிகித மானியம் வழங்குகிறது. 

இதை தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் கீழ் பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டத்தில், 1 கிலோ வாட்ஸ் முதல் 500 கிலோ வாட்ஸ் வரை மின்சாரம் உற்பத்திசெய்யும் சாதனத்தை அமைத்துக்கொள்ளலாம். 1 கிலோ வாட்ஸ் சூரிய ஒளி மின்சார அமைப்பின்மூலம் ஒரு நாளுக்கு 4 யூனிட் முதல் 4.5 யூனிட் வரை மின்சாரத்தை உற்பத்திசெய்யலாம். இதற்கான விலை ரூ.60,000 என்று தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது. இதற்காக, மத்திய அரசு 30 சதவிகிதம், அதாவது ரூ.18,000 மானியம் வழங்குகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சூரிய ஒளி மின்சாரத்தை அமைப்பவர்களுக்கு உபயோகப்படும் மின்சாரம் போக மீதமுள்ள மின்சாரம், மின்வாரியத்துக்கு அனுப்பப்படுவதால், மின் கட்டணம் செலுத்துவது குறைக்கப்படுகிறது. மின்சாரம் சேமிக்கப்படுகிறது. பராமரிப்புச் செலவு மிகவும் குறைவு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுவதில்லை. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள், ஆதார் கார்டு நகல், மின்கட்டண ரசீது நகல்,         1 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் உதவிப் பொறியாளர், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை, 2-ம் தளம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாவட்ட ஆட்சியரகம் என்ற முகவரியில் நேராகவும்,  www.teda.in என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பித்துப் பயன்பெறலாம். மேலும், இத்திட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு 7708 064710, 77080 64635 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்புகொள்ளலாம்" என்றார்.