Published:Updated:

ஹைதராபாத் குண்டுவெடிப்பில் பாக்.கிறகு தொடர்பு: அத்வானி குற்றச்சாட்டு

மும்பை: ஹைதராபாத் குண்டுவெடிப்பில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளதாக பா.ஜனதா  மூத்த தலைவர் எல்.கே. அத்வானி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மும்பையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,"பல ஆண்டுகளாக இந்தியா மீது போர் தொடுக்கும் பாகிஸ்தானின் முயற்சி  வெற்றியடையவில்லை. எனவே, இந்தியா மீது மறைமுக போரை நடத்துகிறது.  தீவிரவாதத்துக்கு உதவி செய்து இந்தியாவுக்கு தொல்லை கொடுக்கிறது.

##~~##
ஹைதராபாத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பாகிஸ்தானுக்கு பங்கு உள்ளது. தங்களுக்கு  தொடர்பு இல்லை என்று பாகிஸ்தான் கைகழுவ முடியாது.
வாஜ்பாய்-முஷாரப் சந்திப்பின்போது பாகிஸ்தானில் இந்தியாவுக்கு தீவிரவாத  நடவடிக்கைகளை அனுமதிக்க மாட்டோம் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அந்த  வாக்குறுதிக்கு பாகிஸ்தான் கட்டுப்பட வேண்டும்.பாகிஸ்தானில் இயங்கும் பயங்கரவாத  பயிற்சி முகாம்களை அழிக்க வேண்டும்" என்றார்.