Published:Updated:

`ஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படும் என எழுதிகொடுங்கள்' - அமைச்சரை அதிரவைத்த இளைஞர்!

`ஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படும் என எழுதிகொடுங்கள்' - அமைச்சரை அதிரவைத்த இளைஞர்!
`ஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படும் என எழுதிகொடுங்கள்' - அமைச்சரை அதிரவைத்த இளைஞர்!

`ஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படும் என எழுதிகொடுங்கள்' - அமைச்சரை அதிரவைத்த இளைஞர்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படும் என எழுதிக்கொடுக்க வேண்டும் என்று கூறி அமைச்சர் கடம்பூர் ராஜுவை இளைஞர் அதிரவைத்தார்.

ஸ்டெர்லைட் கலவரத்துக்கு பின்பு தூத்துக்குடி மெள்ள மெள்ள இயல்புநிலைக்குத் திரும்பி வருகிறது. இன்று காலை தான் 144 தடை உத்தரவு முடிந்தது. மீண்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பில்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்து சேவை, காய்கறிகள் உட்பட வழக்கம் போல்  அத்தியாவசிய தேவைகள் கிடைக்க ஆரம்பித்துவிட்டன. இதனால் தூத்துக்குடி மக்கள் ஓரளவுக்கு நிம்மதியடைந்துள்ளனர். இந்தநிலையில் 5 நாட்களுக்குப் பிறகு துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்டவர்களைத் தமிழக அரசு சார்பில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு சந்தித்து ஆறுதல் கூறினார். 

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 2,3 மற்றும் 4வது தளத்தில் உள்ளவர்களை அவர் சந்தித்தார். 2 மற்றும் 3வது தளத்தில் இருந்த பாதிக்கப்பட்டவர்களை விரைவாகச் சந்தித்த அவர் 4வது தளத்திற்கு வந்தார். அங்கு, போராட்டத்தில் ஈடுபட்ட 21 கிராமங்களில் ஒன்றான பண்டராம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் ராஜிடம் அமைச்சர் நலம் விசாரித்தார். அப்போது, அமைச்சரிடம் பேசிய சந்தோஷ் ராஜ்  ``முற்றுகை போராட்டத்தின் போது நான் தண்ணீர், பிஸ்கட் பாக்கெட்டுக்களை வழங்கினேன். மாவட்ட வளாகத்தில் நிகழ்ந்த தடியடியில் போலீஸார் என்னையும் தாக்கினர். காரணம் கேட்டதற்கு  `நீ கறுப்புச்சட்டை அணித்திருக்கிறாய் அதனால் அடிப்போம்' எனக் கூறினர். இதனால் எனது தலை, முதுகு மற்றும் கால்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். தண்ணீர் கட், மின்சாரம் கட் மாதிரியான தாற்காலிக நடவடிக்கைகள் வேண்டாம். நிரந்தரமாக மூடப்படும் என எழுதி கையெழுத்து போட்டுக்கொடுங்கள்" என்று பேசினார். இளைஞரின் பேச்சில் அதிர்ந்த அமைச்சர் கடம்பூர் ராஜு, கையெழுத்து கேட்டதற்கு,  `முடியாது தம்பி. அரசு நடவடிக்கை எடுக்கும்' என்று கூறி அடுத்தவரை பார்க்கச் சென்றார். 

அப்போது அவரின் அருகே வந்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அமைச்சரிடம்  `சார் இத்துடன் முடித்துக்கொண்டு கிளம்புவோம்' எனக் கூற இருவரும் அவசர அவசரமாக மருத்துவமனையை விட்டு கிளம்பிச் சென்றுவிட்டனர்.  கிட்டத்தட்டப் பாதிக்கப்பட்டவர்கள் 50 பேரை நலம் விசாரிக்காமல் ஆய்வுக்கூடம் என்ற பெயரில் வெளியேறிவிட்டார். முன்னதாக அமைச்சர் சந்திக்க வருவதை முன்னிட்டு பாதிக்கப்பட்டவர்களுடன் அவர்களது உறவினர்களை இருக்க அனுமதிக்கவில்லை. ஒருவர் தவிர மற்ற அனைவரும் வெளியேற வேண்டும் என மருத்துவமனை தரப்பில் உத்தரவிடப்பட்டதால் அனைவரும் வெளியேறிவிட்டனர். இதற்கிடையே, அமைச்சரிடம் இளைஞர் வாக்குவாதம் செய்தது அங்குச் சிறிது நேரம் பரபரப்பை உண்டாக்கியது. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு