Published:Updated:

இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட வைகோ, பழ.நெடுமாறன் கைது ( படங்கள் )

இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட வைகோ, பழ.நெடுமாறன் கைது ( படங்கள் )
இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட வைகோ, பழ.நெடுமாறன் கைது ( படங்கள் )

சென்னை: சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ, உலக தமிழர் பாதுகாப்பு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், வணிகர் சங்கத் தலைவர் த.வெள்ளையன் உள்பட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட வைகோ, பழ.நெடுமாறன் கைது ( படங்கள் )

இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க கோரி சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகை போவதாக அறிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ, உலக தமிழர் பாதுகாப்பு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், வணிகர் சங்கத் தலைவர் த.வெள்ளையன், ஆனூர் ஜெயதீசன் உள்பட ஏரானமானவர்கள் நுங்கம்பாக்கத்தில் குவிந்தனர்.

இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட வைகோ, பழ.நெடுமாறன் கைது ( படங்கள் )

இதையடுத்து, அவர்கள் இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் கைது செய்து வேனில் ஏற்றினர்.

இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட வைகோ, பழ.நெடுமாறன் கைது ( படங்கள் )

அப்போது, ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று முழக்கம் எழுப்பப்பட்டது.

படங்கள்: வீ. நாகமணி