Published:Updated:

20 முறை இலங்கை கடற்படை சுட்டனர்- காயமடைந்த மீனவர் பேட்டி ( படம் )

20 முறை இலங்கை கடற்படை சுட்டனர்- காயமடைந்த மீனவர் பேட்டி (  படம் )
20 முறை இலங்கை கடற்படை சுட்டனர்- காயமடைந்த மீனவர் பேட்டி ( படம் )
20 முறை இலங்கை கடற்படை சுட்டனர்- காயமடைந்த மீனவர் பேட்டி (  படம் )

காரைக்கால்: 20 முறை தங்கள் மீது இலங்கை கடலோர காவல்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதாக காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காரைக்கால் மீனவர் கூறியுள்ளார்.

இலங்கை கடலோர காவல்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த காரைக்கால் கிளிஞ்சல்மேட்டை சேர்ந்த மீனவர் செண்பகம் வேதாரண்யம் அரசு மருத்துமனையில் சிகி்ச்சை பெற்று வருகிறார்.

இலங்கை கடலோர காவல்படையினரின் அத்துமீறல் குறித்து மீனவர் செண்பகம் விகடன் டாட் காமிடம் கூறுகையி்ல், "நாகை மாவட்டம், வேதாண்ரயம் அருகே 11 கடல் மைல் தூரத்தில் நாங்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தோம்.

இரவு 12.20 மணியளவில் இலங்கை கடலோர காவல்படையினர் எங்களை சுற்றி வளைத்தனர்.

##~~##
நாங்கள் இரண்டு நாட்கள் படகில் பிடித்து வைத்திருந்த மீ்ன்களை கடலில் கொட்ட சொன்னதோடு, வலைகளை அறுத்து எறிய வேண்டும் என்றனர். இதற்கு நாங்கள் மறுப்பு தெரிவித்தோம்.
அப்போது அவர்கள் எங்களை நெருங்கி வந்தனர். இதனால் படகை வேகமாக நாங்கள் ஓட்டினோம். அப்போது, எங்களை நோக்கி இலங்கை கடலோர காவல் படையினர் 20 முறை துப்பாக்கியால் சுட்டனர்.
அப்போது, அனைவரும் படகில் படுத்துக் கொண்டோம். இதையும் மீறி எனது முதுகில் குண்டு பாய்ந்தது. பி்ன்னர் அங்கிருந்து தப்பி அதிகாலை 5 மணிக்கு கரைக்கு வந்து சேர்ந்தோம்" என்றார்.

செய்தி & படம்: -கரு.முத்து